ரத்த கொதிப்பில் இருந்து விடுபட சூப்பர் டிப்ஸ்

Report Print Printha in உடற்பயிற்சி

ரத்த கொதிப்பு பிரச்சனை உள்ளவர்கள் சில எளிய உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால், ரத்த கொதிப்பை கட்டுக்குள் கொண்டு வரலாம்.

ரத்த கொதிப்பை போக்கும் உடற்பயிற்சிகள்?
  • குதிகால்கள் இரண்டையும் ஒன்று சேர்த்து, கைகள் இரண்டையும் மடக்காமல், முன்புறமாக குனிந்து தாடை, மார்பைத் தொடுமாறு உடலை சாதாரண நிலையில் வைத்து மூச்சை வெளியில் விட வேண்டும்.
  • சுவாசத்தை மெதுவாக இழுத்து, உடலை விறைத்து தலையை பின்புறமாக சாய்த்து, மார்பு பகுதியை முன் பக்கமாக தள்ளி, கைகள் இரண்டையும் பின்புறம் நீட்டி, பின் சாதாரண நிலைக்கு வர வேண்டும்.
  • இடுப்பில் கைகளை ஊன்றி கால்களை சம தூரமாக ஒரு அடி அகலம் பரப்பி நுனிப்பாதத்தில் உடம்பைத் தாங்கி தலையை நிமிர்ந்து நின்று மூச்சை வெளியே விட வேண்டும். அதன் பின் மூச்சை இழுத்து மெதுவாக முழங்கால்களை மடக்கி தாழ்த்தி உட்கார வேண்டும்.
  • கால் நுனிப்பாதத்தை விரித்து இடுப்பில் கைகளை ஊன்றி மூச்சை தளர்த்தி தலையை நேராக வைத்து முச்சை இழுத்து நுனிப்பாதத்தில் உடம்பை தாங்கிக் கால்களை நேராக வைத்து, குதிக்காலை மட்டும் மேலே உயர்த்த வேண்டும்.
  • குதிகால்கள் இரண்டையும் சேர்த்து நேராக நின்று முன்புறம் குனிந்து மூச்சை தளர்த்தி கைவிரல்கள் பூமியை தொடுமாறு நிற்க வேண்டும்.
  • குதிகால்கள் இரண்டையும் நேராக வைத்தபடி நின்று தலைக்கு மேல் இரண்டு கைகளையும் நீட்டி, மூச்சினை இழுத்து, இடது புறமாக சாய்ந்து, பழைய நிலைக்கு வந்து மூச்சினை தளர்த்த வேண்டும்.
நன்மைகள்
  • ரத்த ஓட்டம் சீராகும்.
  • இதயத்தின் பலம் அதிகரிக்கும்.
  • ரத்த கொதிப்பு ஏற்படாது.
குறிப்பு

மேற்கூறப்பட்ட உடற்பயிற்சிகளை செய்யும் போது, மிகுந்த சிரமத்துடனோ, வாய் வழியாக சுவாசிக்கவோ கூடாது. ஒரு நாளைக்கு ஒரு பயிற்சியை செய்தால் போதும்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்