இடுப்பு கொழுப்பை எளிதில் குறைக்கும் உடற்பயிற்சி

Report Print Printha in உடற்பயிற்சி
524Shares
524Shares
ibctamil.com

வீரபத்ராசனத்தை தொடர்ந்து காலையில் செய்து வந்தால் இடுப்பை சுற்றியுள்ள கொழுப்பை விரைவில் குறைக்க முடியும்.

யாரெல்லாம் செய்யக் கூடாது?

இடுப்பு, கழுத்து, முழங்கால், பாதம் ஆகிய பகுதிகளில் வலி உள்ளவர்கள் மட்டும் இந்த ஆசனம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

ஆனால் இந்த ஆசனம் செய்யும் போது கழுத்து மற்றும் உடல் விறைப்பாக இல்லாமல் இலகுவாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

வீரபத்ராசனத்தை செய்வது எப்படி?

முதலில் விரிப்பில் நிமிர்ந்து நின்று கொண்டு மூச்சை உள்ளிழுத்தபடி கால்களை மூன்றரை முதல் நான்கு அடி தூரம் வரை விரித்த நிலையில் நிற்க வேண்டும்.

பின் இடது கால் பாதத்தை 45-60 டிகிரி வரை வலது புறம் திருப்பி, வலது கால் பாதத்தை 90 டிகிரி வரை வலது புறம் திருப்பி வலது மற்றும் இடது குதிகாலும் ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும்.

அதன் பின் உடலை வலது புறம் திருப்பி கைகளை மேலே கொண்டு சென்று இரு உள்ளங்கைகளையும் சேர்த்து வலது காலை மடக்கி, வலது தொடை தரைக்கு இணையாக இருக்க வேண்டும்.

ஆனால் இடது கால் எந்த நெளிவும் இல்லாமல் நேராக வைத்து உடல் மற்றும் சற்று பின்னால் வளைத்து தலையை பின்புறம் சாய்த்து அந்நிலையில் 10-30 விநாடிகள் வரை இருக்க வேண்டும்.

இதே போல் இடது பக்கமும் செய்து, இந்த ஆசனத்தை 5-7 முறைகள் செய்ய வேண்டும்.

பலன்கள்
  • இடுப்பை சுற்றியுள்ள கொழுப்பு குறையும்.
  • மார்பு விரிவடைந்து சுவாசம் எளிதாக நடைபெறும்.
  • கால்கள் மற்றும் தோள்பட்டைகள் வலுப்பெறும்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்