பூஷன் முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் வயிறு உப்புசம், வயிற்றுவலி, வாயுத்தொல்லை, மந்தமான உணர்வு போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகள் குணமாகும்.
பூஷன் முத்திரையை செய்வது எப்படி?
முதலில் விரிப்பின் மீது சப்பணம் போட்டு அமர்ந்து, வலது கை கட்டை விரல் நுனியுடன் ஆள்காட்டி மற்றும் நடுவிரல் நுனியைத் தொட்டும், மற்ற விரல்கள் நீட்டியும் இருக்க வேண்டும்.
அதன் பின் இடது கை கட்டை விரல் நுனியுடன் மோதிர விரல் மற்றும் நடுவிரல் நுனிகள் தொட்டும், ஆட்காட்டி மற்றும் சுண்டு விரல்கள் நீட்டியும் இருக்க வேண்டும்.
இதை 20-30 நிமிடங்கள் என்று ஒரு நாளைக்கு நான்கு முறைகள் செய்ய வேண்டும்.
பலன்கள்
- உணவு செரிமானம் எளிதில் நடைபெறும்.
- சிறுகுடல், பெருங்குடல், கல்லீரல், மண்ணீரல் ஆகிய உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படும்.
- நரம்புகள் ஓய்வு பெறுவதுடன், முகத்தில் உள்ள நரம்புகளின் பாதிப்புகளை குறைக்கிறது.
- வயிறு உப்பிசம், வயிற்றுவலி, வாயுத்தொல்லை, மந்தமான உணர்வு ஆகியவை நீங்கும்.