அசிங்கமான பின்புற சதையை குறைக்கும் எளிய வழி

Report Print Printha in உடற்பயிற்சி
454Shares
454Shares
ibctamil.com

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை போன்ற காரணத்தினால் இளம் வயதிலேயே இடுப்பு, தொடை, பின்புறம் போன்ற பகுதியில் கொழுப்பு சேர்ந்து உடல் பருமனை அதிகமாக்கிவிடும்.

எனவே உடலின் ஒவ்வொரு பகுதியிலும் எடையை கட்டுப்படுத்தி வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

காஃபின் க்ரஞ்சஸ்(coffin crunches)

தரையில் நேராகப் படுத்து, இரண்டு கால் முட்டிகளையும் மடக்கி, தலைமேல் நோக்கியவாறு கைகளை இரண்டு பக்கத்திலும் ஊன்றி தலையை மட்டும் மேல் நோக்கித் தூக்க வேண்டும்.

அதன் பின் முட்டிகள் மடக்கிய நிலையில் ஓரிரு விநாடிகளுக்கு கழித்து மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும். இதுபோல் தொடர்ந்து 15 முறை செய்ய வேண்டும்.

சைடு க்ரஞ்சஸ் (Side crunches)

தரையில் நேராகப் படுத்துக் கொண்டு, இரண்டு கால்களையும் சமமாக நீட்டி இரண்டு கைகளையும் தலையின் பின் கட்டிக் கொள்ள வேண்டும்.

வலது காலின் மேலே இடது காலை வைத்து தலையை லேசாக உயர்த்தியவாறு ஓரிரு வினாடிகள் இருக்க வேண்டும்.

அதேபோல், இடது காலின் மேலே வலது காலை வைக்க வேண்டும். இதேபோல் 15 முறை இரண்டு கை கால்களையும் மாற்றி மாற்றி செய்ய வேண்டும்.

அப்டாமினல் ஸ்ட்ரச்(Abdominal stretch)

தரையை பார்த்தபடி படுத்து இரண்டு கைகளையும் முன் ஊன்றி உடலோடு சேர்த்து தலையையும் தரையில் இருந்து சிறிது அடி மேலே உயர்த்த வேண்டும்.

அதன் பின் மொத்த அழுத்தமும் கைகளில் வைத்து ஐந்து நொடிகள் இருந்து, மீண்டும் உடலை பழைய நிலைக்குக் கொண்டு வந்து மீண்டும் தலை மற்றும் உடலையும் மேலே தூக்கியவாறு செய்ய வேண்டும்.

புஷ் அப்(Push-up)

முதலில் ஐந்து புஷ் அப் பயிற்சிகள் என்று ஆரம்பித்து படிப்படியாக புஷ் அப் பயிற்சிகளை அதிகரித்து 20 புஷ் அப் பயிற்சிகள் வரை செய்து வந்தால் பின்புறத்தில் உள்ள தேவையற்ற சதைகளை எளிதில் குறைக்க முடியும்.

எடை தூக்கும் பயிற்சி

எடை தூக்கும் பயிற்சியை தினமும் தவறமல் செய்து வந்தால் நம் உடலின் பின்புற சதைகள் எளிதில் குறைந்து விடும்.

நடைப்பயிற்சி

தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் குறைந்தது 15 நிமிடங்கள் நடைபயிற்சி செய்து வரலாம் அல்லது மாடிப்படிகளை ஏறி இறங்கும் பயிற்சியை செய்யலாம்.

நடனம்

நடனம் ஆடுவதினால் பின்புற பகுதிக்கு மட்டுமில்லாமல் உடலின் அனைத்து பகுதிகளும் கட்டுக்கோப்பாக இருக்கும். எனவே தினமும் ஒரு 2 பாடலுக்காவது நடனமாடலாம்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்