இடுப்புச் சதையை வேகமாக குறைக்கும் சூப்பர் வழி

Report Print Printha in உடற்பயிற்சி
394Shares
394Shares
ibctamil.com

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று பலவித ஆரோகியமற்ற டயட் காரணமாக சிலருக்கு பக்கவிளைவுகள் ஏற்படுமே தவிர, உடல் எடையில் எவ்வித மாற்றமும் தெரியாது.

ஆனால் காலையில் தினமும் எழுந்து உடல் எடை குறைக்கும் சில உடற்பயிற்சிகளை செய்து வந்தாலே போதும். ஆரோக்கியமான முறையில் எடையை குறைக்கலாம். அதற்கான சில உடற்பயிற்சிகள்,

ஸ்குவாட்ஸ்(Squats)

இப்பயிற்சியை செய்யும் போது முதலில் நேராக நின்று கைகளை நேராக நீட்டி, கால் முட்டி மடங்குமாறு நேராக உட்கார்ந்து எழ வேண்டும். இவ்வாறு தினமும் 20 முறைகள் செய்து வந்தால் இடுப்பு பகுதியில் நல்ல மாற்றத்தை காணலாம்.

காஃபின் க்ரஞ்சஸ்(caffeine crunches)

இப்பயிற்சியை செய்யும் போது முதலில் தரையில் நேராகப் படுத்து, 2 கால் முட்டிகளையும் மடக்கிய நிலையில், கைகளை இரண்டும் பக்கத்தில் ஊன்றியபடியே, தலையை மட்டும் மேல் நோக்கித் தூக்க வேண்டும்.

இவ்வாறு ஓரிரு விநாடிகளுக்கு இருக்க வேண்டும். இதுபோல் தொடர்ந்து 15 முறைகள் செய்ய வேண்டும்.

சைடு க்ரஞ்சஸ்(side crunches)

இப்பயிற்சியை செய்யும் போது முதலில் தரையில் நேராகப் படுத்துக் கொண்டு, 2 கால்களையும் சமமாக நீட்டி, 2 கைகளையும் தலையின் பின் கட்டிக் கொள்ள வேண்டும்.

அதன் பின் வலது காலின் மேலே இடது காலை வைத்து தலையை லேசாக உயர்த்தி ஓரிரு வினாடிகள் கழித்து அதேபோல், இடது காலுக்கும் செய்ய வேண்டும்.

அப்டாமினல் ஸ்ட்ரச்(abdominal stretch)

இப்பயிற்சியை செய்யும் போது முதலில் தரையைப் பார்த்தபடி படுத்து கொண்டு 2 கைகளையும் முன்னால் ஊன்றி, உடலோடு சேர்த்து தலையையும் தரையில் இருந்து சிறிது அடி மேலே உயர்த்த வேண்டும்.

இதே நிலையில் 5 நொடிகள் இருந்து, சிறிது இடைவெளிக்கு பின் மீண்டும் அவ்வாறு செய்ய வேண்டும்.

ஃப்ளோரிங்

இப்பயிற்சியை செய்யும் போது முதலில் தரையில் ஒரு புறமாக படுத்துக் கொண்டு ஒரு பக்கத்தில் கையை நீட்டி, திரும்பி படுத்திருக்கும் பகுதியில் இருக்கும் கால் நேராகவும், அடுத்தக்கால் நீட்டியிருக்கும் கைகளை தொட வேண்டும்.

இவ்வாறு வலது, இடது என மாற்றி பத்து முறைகள் செய்ய வேண்டும்.

ஸ்டாண்டிங்(Standing)

கால்களை சற்று அகலமாக வைத்து நின்று கொண்டு வலது புறக்கையை தொடையில் பிடித்தும், இடது புறக்கையை நீட்டியவாறும் வலது பக்கம் வளைய வேண்டும்.

அதுவும் எந்தப்புறம் கையை தொடையில் பிடித்திருக்கிறீர்களோ அந்தப் பக்கம் வளைய வேண்டும். இதனை 10 முறை இடது, வலது மாற்றி செய்ய வேண்டும்.

குறிப்பு

இடுப்பகுதி குறைய வேண்டுமெனில் மேலே கூறப்பட்டுள்ள உடற்பயிற்சி மட்டுமின்றி கலோரி குறைவான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்