இனிமேல் நீர்க்கட்டியே வராது: நிரந்தரமான தீர்வு

Report Print Printha in உடற்பயிற்சி
1057Shares
1057Shares
ibctamil.com

பெரும்பாலான பெண்கள் கர்ப்பப்பை நீர்கட்டி பிரச்சனைகள் மூலம் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.

இப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு மருத்துவரிடம் சென்றால், அவர்கள் கொடுக்கும் மருந்து, மாத்திரைகள் நமக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் வகையில் கூட அமையலாம்.

ஆனால் எவ்வித பக்கவிளைவுகளுமே ஏற்படாமல் நீர்க்கட்டி பிரச்சனைகளை குணப்படுத்த பட்டாம்பூச்சி வடிவம் மற்றும் மான் போன்ற உடற்பயிற்சிகள் நிரந்தரமான தீர்வினை அளிக்க உதவுகிறது.

பட்டாம்பூச்சி வடிவம்

இப்படத்தில் உள்ளதை போன்று இரண்டு கால்களையும் மடக்கு நடுவில் வைத்துக் கொண்டு, இரு கைகளினாலும் கால்களை நடுவில் பிடித்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின் பட்டாம்பூச்சி தனது சிறகை அசைப்பது போன்று இரு கால்களையும் மெதுவாக அல்லது வேகமாக அசைக்க வேண்டும்.

இப்பயிற்சியை தொடர்ந்து 5 நிமிடம் செய்து வந்தாலே போதும்.

பலன்கள்
  • நீர்க்கட்டிகள் உடைந்து மாதவிடாயின் போது வெளியேறிவிடும்.
  • உள்ளுறுப்புகளின் செயல்பாடு சீராக இருக்க உதவுகிறது.

மான் பயிற்சி

இந்த மான் பயிற்சி வேதாத்ரி மகரிஷியினால் சொல்லப்பட்டது. இப்பயிற்சியை முறைப்படி கற்றுக் கொள்வது மிகவும் முக்கியம்.

இப்பயிற்சியை கற்றுக் கொண்டு முறையாக செய்து வந்தால் கர்ப்பப்பை நீர்க்கட்டி முதல் மார்பக பிரச்சனை வரையிலும் நல்ல தீர்வினைக் காணலாம்.

மேலும் இதனால் உடல் பருமன், தைராய்டு ஹார்மோன்களின் பிரச்சனை போன்றவையும் இந்த மான் பயிற்சியின் மூலம் சரியாகும்.

மெனோபாஸ் ஆனவர்கள் கூட இப்பயிற்சியை செய்யலாம்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்