எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தொப்பையை குறைக்க முடியலையா?

Report Print Printha in உடற்பயிற்சி
1114Shares
1114Shares
ibctamil.com

இந்த உலகத்துல தொப்பையை குறைக்க போராடுபவர்கள் தான் அதிகம், அவர்களுக்கான நான்கு உணவுகள் மற்றும் இரண்டு உடற்பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

உணவுகள்
  • கறிவேப்பிலையில் கொழுப்புச் செல்களை கரைத்து வெளியேற்றும் பொருள் உள்ளது. எனவே தினமும் காலையில் வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை இலைகளை வாயில் போட்டு மென்று விழுங்க வேண்டும். இதனால் தொப்பை குறைந்து, நமது உடம்பின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக்கப்படுகிறது.
  • க்ரீன் டீயில், EGCG என்னும் பொருள் நமது உடம்பின் கொழுப்பைக் குறைக்கும் தன்மைக் கொண்டது. எனவே காலை மற்றும் மாலையில் ஒரு கப் க்ரீன் டீ குடித்து வந்தால், தொப்பை விரைவில் குறைந்து விடும்.
  • சோம்பு நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்கும். அதற்கு சோம்பை லேசாக வறுத்து, பொடி செய்து, பின் தினமும் உணவு உண்பதற்கு 15 நிமிடத்திற்கு முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் சோம்பு பொடியை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இதனால் தொப்பை குறைந்து, வாய்வுத் தொல்லை, மலச்சிக்கல், செரிமான பிரச்சனை போன்றவை நீங்கும்.
  • ஒரு கப் சுடுநீரில் 1 1/2 டீஸ்பூன் பட்டைத் தூள் சேர்த்து 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து, தினமும் காலை உணவு உண்பதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன்பு மற்றும் இரவில் படுக்கும் முன்பும் குடித்து வர வேண்டும். இதனால் தொப்பை விரைவில் குறைந்து நல்ல பலன் கிடைக்கும்.
உடற்பயிற்சிகள்
  • தரையில் ஒரு துணியை விரித்து, அதன் மேல் குப்புறப் படுத்த நிலையில் 1 நிமிடம் இருக்க வேண்டும். இதே போல் தினமும் காலை மற்றும் மாலையில், 4 முறைகள் செய்து வந்தால், அடிவயிற்றில் உள்ள கொழுப்புக்கள் கரைந்து, தொப்பை குறையும். இந்த பயிற்சிக்கு ப்ளான்க் என்று பெயராகும்.

  • பர்ப்பீஸ் என்ற உடற்பயிற்சியை செய்வதன் மூலம், நமது உடம்பில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு, கொழுப்புக்கள் வேகமாக கரையும். எனவே பர்ப்பீஸ் பயிற்சியை தினமும் 10 முறை வேகமாக செய்து வந்தால், விரைவில் தொப்பை குறைந்து விடும்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்