தினமும் நடைப்பயிற்சியை மேற்கொண்டால் பல்வேறு நோய்களின் தாக்கத்தில் இருந்து விலகி இருக்கலாம்.
இதனால் மனதளவில் மட்டுமின்றி, உடலளவிலும் ஆரோக்கியமானவராகவும், சுறுசுறுப்பானவராகவும் இருக்கலாம் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும் ஒருவர் அன்றாடம் குறைந்தது 15 நிமிட நடைப்பயிற்சியுடன், சரியான டயட்டையும் மேற்கொண்டால் நீண்ட நாள் வாழ முடியும் என்பது நிச்சயம்.
தினமும் 15 நிமிடங்கள் நடப்பதால் உண்டாகும் நன்மைகள்
எடை இழப்பு
அதிக எடை உடைய பெண்கள் தினமும் 15 நிமிடங்களாவது நடந்தாலே போதுமானது. முக்கியமாக 40 முதல் 66 வயது வரை உள்ளவர்கள் நடைபயிற்சி மேற்க்கொள்ள வேண்டியது அவசியம்.
மகிழ்ச்சி
அமெரிக்காவில் கல்லூரி மாணவர்களை வைத்து நடத்தப்பட்ட ஆராய்ச்சி ஒன்றில் 12 நிமிடங்கள் தினமும் நடப்பதன் காரணமாக நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறதாம்.
சிந்தனை திறன்
நடைப்பயிற்சி மூளைச் செல்களின் செயல்பாட்டை அதிகரித்து நினைவாற்றலை கூட்டுவதோடு, மூளைத் திசுக்களின் அளவு குறைவதைத் தடுத்து, நினைவாற்றல் இழப்பு மற்றும் முதுமையில் வரும் டிமென்ஷியா போன்றவற்றின் அபாயத்தைத் தடுக்கும்.
இளமை
தினமும் 15 நிமிடங்கள் நீங்கள் அமைதியான இயற்கை சூழ்ந்த இடங்களில் நடப்பதால், மனது சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறையும். இளமை நீடிக்கும்.
இதயத் துடிப்பு
நடைப்பயிற்சியை ஒருவர் தினமும் மேற்கொள்ளும் போது, இதயத் துடிப்பின் வேகம் அதிகரித்து இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். மனித உடலின் கெட்டக் கொழுப்புகள் கறையும்.
செரிமான மண்டலம்
தினமும் 15 நிமிடங்கள் நடப்பதால் செரிமான மண்டலத்தின் செயல்பாடு மேம்பட்டு அஜீரண கோளாறுகள் நீங்கி உடலின் மெட்டபாலிச விகிதமும் அதிகரிக்கும்.
எலும்புகளின் வலிமை
தினமும் அதிகாலையில் சூரிய வெளிச்சம் உடலில் படும்படி நடைப்பயிற்சியை மேற்கொண்டால், உடலில் வைட்டமின் டி உற்பத்தியை ஊக்குவித்து, எலும்புகள் பலம் பெற்று வலிமையாகவும் இருக்கும்.
நோயெதிர்ப்பு சக்தி
நடைப்பயிற்சியின் மூலம் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து கிருமிகளை எதிர்த்துப் போராடும் இரத்த வெள்ளையணுக்களின் உற்பத்தி அதிகரித்து, நோயெதிர்ப்பு சக்தி வலுபெறும்.