இரண்டு நிமிடத்தில் மூக்கடைப்பு பிரச்சனையை சரிசெய்ய இதை செய்யுங்க!

Report Print Jayapradha in உடற்பயிற்சி

நம் உடலுக்கு போதுமான அளவு தைராய்டு சுரப்பி சுரக்கவில்லை என்றாலும் மூக்கடைப்பு பிரச்சனை ஏற்படும்.

வைரஸ் தொற்றுக்களால், சளி, மூக்கடைப்பு, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படுவதுடன், சைனஸ் பிரச்சனைகளும் தொடரும்.

உடல்நலம் ஆரோக்கியமாக இருந்தும் நெடு நாட்களாக மூக்கடைப்பு பிரச்சனை இருந்தால் அதற்கான காரணம் என்னவென்பதை தெரிந்துக் கொள்வோம்.

இயற்கை முறையில் மூக்கடைப்பு பிரச்சனையை போக்கும் சுவாசப் பயிற்சி
  • மூக்கடைப்பு நீங்க முதலில் கைகள் மூலம் மூக்கை அழுத்தி பிடித்து, அசௌகரியத்தை உணரும் போது, கைகளை எடுத்து விட்டு மெதுவாக மூச்சை விட வேண்டும்.
  • மூச்சை இழுத்து வைத்து சிறிது நேரம் நடந்து விட்டு பின் ஒரு நாற்காலியில் முதுகெலும்பை வலைக்காமல் நேராக அமர்ந்துக் கொண்டு மெதுவாக மூச்சை விட வேண்டும்.
  • வாயின் வழியாக மூச்சை நன்றாக இழுத்து மூக்கின் வழியாக மெதுவாக விட வேண்டும். இதேபோல மீண்டும் மீண்டும் செய்து வந்தால், மூக்கடைப்பு பிரச்சனை நீங்குவதுடன் தசைகளும் தளர்வடையும்.

மூக்கடைப்பை குணமாக்கும் வேறு வழிகள்
  • சிறிது உப்பை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து நன்கு கலக்கி, நீராவி மூக்கினுள் பரவுமாறு மூக்கின் அருகில் வைத்து ஆழமாக உறிஞ்ச வேண்டும். இதனால் மூக்கடைப்பு எளிதில் நீங்கும்.
  • ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து, அதில் நீலகிரி தைலம் 2 சொட்டு ஊற்றி ஆவி பிடிக்க வேண்டும். இதனை 2 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் மூக்கடைப்பு, சளி தொல்லை நீங்கும்.
  • ஒரு கப் தண்ணீரில் 2 அல்லது 3 பூண்டு பற்களைப் போட்டு, அதனுடன் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து கொதிக்க வைத்து, அதை சில நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், மூக்கடைப்பில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
  • வெதுவெதுப்பான நீரில் துணியை நனைத்து நன்கு பிழிந்து, அதை முகத்தின் மீது 10-15 நிமிடம் வைக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு பலமுறை செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.
  • மூக்கடைப்பு பிரச்சனை உள்ளவர்கள், தினமும் புதினா, இஞ்சி, ஏலக்காய், துளசி ஆகியவற்றை சேர்த்து டீ தயாரித்து குடித்து வந்தால், மூக்கடைப்பை தடுக்கலாம்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers