120 கிலோவில் இருந்து 60 கிலோ குறைத்த பின்னணி பாடகி ரம்யா: புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்

Report Print Deepthi Deepthi in உடற்பயிற்சி

பின்னணி பாடகி ரம்யா சமூகவலைளத்தில் 10 வருடத்திற்கு முன்னர் எடுத்துக்கொண்ட புகைப்படம் அதிக லைக்ஸ் மற்றும் கமெண்டுகளை குவித்து வருகிறது.

அதற்கு காரணம் இவரது உடல் எடை 120 கிலோவில் இருந்து 60 கிலோவாக குறைந்திருக்கிறார்.

120 கிலோவுக்கும் அதிகமாக என் உடல் எடை இருந்துச்சு. அதனால, உடல்நிலை ரொம்பப் பாதிக்கப்பட்டது. எனவே, உடல் எடையைக் குறைக்கத் தீர்க்கமா முடிவெடுத்தேன். ஜிம்முக்குப் போக ஆரம்பித்தேன்.

தினமும் மூணு மணிநேரம் தவறாம உடற்பயிற்சி செய்றேன். ஆனா, உணவுக்கட்டுப்பாட்டில் கவனம் செலுத்தாம, பிடிச்ச உணவுகளைத் திருப்தியாச் சாப்பிடுவேன். ரொம்பக் கஷ்டப்பட்டு, என் உடல் எடையைக் குறைத்தேன். இப்போ 60 ப்ளஸ் உடல் எடையில் இருக்கிறேன்.

பல வருட உடற்பயிற்சியின் பலன்தான். நான் பத்து வருஷத்தைவிட இப்போ ரொம்ப இளமையா இருக்கிறதாப் பலரும் சொல்றாங்க. அதைவிட, இப்போ உடலளவிலும் மனதளவில் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்கிறார் ரம்யா.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers