விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா? இந்தவொரு உடற்பயிற்சியே போதும்

Report Print Kavitha in உடற்பயிற்சி

இன்றைய நவீன உலகில் உடல் எடையினால் பலரும் பாதிக்கப்பட்டு மனவுளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

இதனால் ஜிம்மிற்கு சென்று கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடல் எடையினை கஷ்டப்பட்டு குறைப்பது வழக்கமாகிவிட்டது.

அந்தவகையில் தற்போது எளிய உடற்பயிற்சி என்று விலங்குகளின் அசைவுகளை மையமாக வைத்து வேடிக்கையாக செய்யும் Animal Workout பிரபலமாகி வருகின்றது.

இந்த Animal workout சிரமம் இல்லாமல் விளையாட்டு போன்று செய்துவிடலாம். இதனால் தானாகவே உடற்பயிற்சியின் மீது ஆர்வம் அதிகரிக்கும்.

மேலும், எந்த உபகரணமும் இல்லாமல், உடல் முழுவதற்குமான உடல் எடை மற்றும் கார்டியோ உடற்பயிற்சிகள் செய்வதின் முழு பலன்களையும் இவற்றால் பெற முடியும். தற்போது உடல் எடையை குறைக்கும் Animal workout இன் எளிய பயிற்சிகளை பார்ப்போம்.

Donkey Kick Excercise

முதலில் கைகளைத் தோளுக்கு நேராக தரையில் ஊன்றி, கால்களை பின்புறமாக நீட்டி, முழங்காலை மட்டும் சிறிது மடக்கிய நிலையில் இருக்க வேண்டும்.

கைகளை தரையில் நன்றாக ஊன்றிக் கொண்டு ஒரே ஜம்பில் தரையிலிருந்து மேலே எழ வேண்டும்.

முழங்கால் மார்புக்கு நேராகவும் பின்னங்காலை சற்றே உயர்த்திய நிலையில் 5 நொடிகள் அதே நிலையில் நிற்க வேண்டும்.

பின்னர் மெதுவாக பழைய நிலைக்கு வர வேண்டும். தரையிலிருந்து அதிக உயரம் தூக்க முடியாவிட்டாலும், வெறுமனே முழங்காலை மார்புக்கு நேராக மடக்க முயற்சிக்கலாம். கழுதை உதைப்பது போல வேடிக்கையான பயிற்சியாக இது இருக்கும்.

இதனை செய்வதால் இடுப்பு மற்றும் பின்பக்க எலும்புகள், தசைகள் வலுவடைகின்றன. முக்கியமாக தோள்பட்டை எலும்புகளுக்கு உறுதி கிடைக்கிறது.

Bear walking

முதலில் கைகள், கால்களை மடக்கி தரையில் அமர்ந்து கொள்ள வேண்டும். இப்போது வலது முழங்காலை தரையில் ஊன்றியவாறு பின்னங்காலை சற்று பின்னோக்கி நீட்டியவாறு வைக்க வேண்டும்.

பின் இடது முழங்காலை மடக்கி, பாதத்தை தரையில் ஊன்றியவாறு வைத்துக் கொள்ள வேண்டும்.

இதற்கடுத்து, குழந்தை தவழ்வதைப்போல் இப்போது வலது காலையும், இடதுகையையும் தரையில் ஊன்றி முன்புறமாக நகர்த்த வேண்டும்.

இதேபோல் முன்புறமாக 4 அடிகளும், பின்புறமாக 4 அடிகளும் மாற்றி மாற்றி செய்ய வேண்டும். இதற்கு கரடி நடை என்று பெயர்.

இந்த உடற்பயிற்சி மேற்கொள்ளுவதனால் தசைக்கு வலு சேர்க்கிறது. இதயத்துக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு வளர்சிதை மாற்றத்தையும் தூண்டி, உடலின் தாங்கும் திறனை அதிகரிக்கிறது.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்