உடலை வலுவாக்க இந்த உடற்பயிற்சி மட்டும் செய்தாலே போதும்

Report Print Kavitha in உடற்பயிற்சி

30 வயது தாண்டினாலே நமது உடலில் சோர்வடைந்து விடும். இதனால் எந்த வேலையும் செய்ய முடியாமல் போய்விடும். இதற்கு கடின உடற்பயிற்சிகள்,மருந்துகள்,ஊசிகள் போன்றவற்றை உபயோகிக்கமால் ஜிம் பால் பயிற்சிகள் மூலம் உடலை வலுவாக்க முடியும்.

உடலின் நெகிழ்வுத்தன்மை, அழகான உடல் கட்டமைப்பு, உடல் எடையைச் சீராக வைத்திருக்க உதவி புரிகின்றது.

தற்போது ஜிம் பால் வைத்து உடலை எப்படி வலுவாக்குவது என்ற பயிற்சிகள் பற்றிப் பார்க்கலாம்.

பேக் ஹைப்பர்டென்ஷன் (Back Hypertension)

வயிற்றுப்பகுதி ஜிம் பாலின்மீது இருக்கும்படிக் குப்புறப் படுக்க வேண்டும். காலைச் சற்று அகற்றிய நிலையில் வைப்பதுடன் கைகளைக் கோத்துத் தலையின் பின்புறமாக வைக்க வேண்டும்.

தலையைக் குனிந்தபடி வயிற்றுப்பகுதியை ஜிம் பாலின்மீது அழுத்தி, மெதுவாக கழுத்து மற்றும் தலைப்பகுதியை உயர்த்த வேண்டும்.

இதே நிலையில் சில விநாடிகள் இருந்துவிட்டு மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும்.

இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து 10 முறை செய்யலாம்.

இந்த பயிற்சியை செய்வதன் மூலம் அடிவயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள் வலுப்பெறும். முதுகு வலியைக் குறைக்கும். உடல் கட்டமைப்பை மேம்படுத்தும். உடலின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கும்.

சைடு க்ரன்ச் (Side Crunch)

முதுகுத்தண்டு ஜிம் பாலின்மீது இருக்கும்படிப் படுத்த நிலையில், தலையைச் சற்று தூக்கியபடி இருக்க வேண்டும்.

நிலையாக இருக்கக் கால்களை விரித்து வைத்துக்கொள்ள வேண்டும். கைகளை மார்புப்பகுதிக்கு நேராக மடித்துக்கொள்ள வேண்டும்.

இப்போது முதுகுத்தண்டின் அடிப்பகுதியில் சிறிது அழுத்தம் கொடுத்து, உடலை மெதுவாக உயர்த்தி, முடிந்தவரை வலது புறமாகத் திரும்ப வேண்டும்.

இதே நிலையில் சில விநாடிகள் இருந்துவிட்டு, மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும்.

இதேபோல் இடது புறமும் செய்ய வேண்டும். இது ஒரு செட். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து 10 முறை செய்யலாம்.

பலன்கள்

முதுகுத்தண்டு மற்றும் அடிவயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள் வலுப்பெறும். உடலின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கும். தோள்பட்டை, இடுப்பு மற்றும் முதுகுப்பகுதியில் உள்ள தசைப்பிடிப்புகளைச் சரிசெய்யும்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers