முதுகு வலியை குணமாக்கணுமா? இந்த பயிற்சியை மட்டும் செய்து பாருங்க

Report Print Kavitha in உடற்பயிற்சி

இன்றைய காலக்கட்டத்தில் வேலைக்கு செல்லும் பெரும்பாலனோர் முதுகு வலியினால் பெரும் அவதிப்படுவதுண்டு.

இது பொதுவாக முதுகெலும்பிலுள்ள தசைகள், நரம்புகள், எலும்புகள், கணுக்கள் அல்லது மற்ற அமைப்புகளில் தோன்றுகிறது.

முதுகுவலி வந்தாலே நம்மை எந்த வேலையையும் செய்ய விடாமல் முடக்கிவிடுகின்றது.

அந்தவகையில் முதுகுவலியினால் அவதிப்படும் போது நாம் மாத்திரை மருந்துகளை அதிகளவு எடுப்பது தான் வழக்கம்.

இதனை தவிர்த்து உடற்பயிற்சியிலும், யோகாசணங்கள் மூலமும் முதுகுவலியை குணப்படுத்த முடியும்.

இதில் இதனை பிட்டிலாசானா எனப்படும் யோகாசனம் முதுகுவலியை விரட்ட உதவி புரிகின்றது.

இந்த ஆசனத்தை சம்ஸ்கிருத மொழியில் பசுவின் பெயரான பட்டிலா என்பதிலிருந்து உருவானதாகும்.

மேலும் இந்த பயிற்சியை நமது உடலையும் பசுவை போல வைத்து இதனை செய்ய வேண்டும்.

இந்த ஆசனம் செய்வதால் முதுகுப்பகுதி மற்றும் அடிவயிற்று பகுதிக்கு வலு சேர்க்கிறது. தற்போது இந்த ஆசனத்தை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

எவ்வாறு செய்வது?

முதலில் விரிப்பில் கைகள் இரண்டையும் தரையில் ஊன்றி, கால்களை மடக்கி நன்கு கால்கள் கொண்ட பசுவை போல செய்ய வேண்டும்.

பின்னர் உங்களின் பின்பகுதியை சற்றே உயர்த்தி, உங்களின் வயிற்று பகுதியை கீழ்நோக்கி தள்ள வேண்டும்.

தலையை நேராகவோ அல்லது மேல் பக்கமாகவோ உயர்த்தி மூச்சினை மெதுவாகவும், வேகமாகவும் பயிற்சி செய்ய வேண்டும்.

பலன்கள்

இது முதுகுப்பகுதி மற்றும் அடிவயிற்று பகுதிக்கு வலு சேர்க்கிறது.

முதுகுத்தண்டின் வளைவுத்தன்மை அதிகரிக்கின்றது.

மேலும் இது வளர்சிதை மாற்றத்தை சமநிலைப்படுத்துகிறது.

உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. முதுகு வலியை குணமாக்குகிறது.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers