பெண்களுக்கு வயிற்றுப்பகுதி சதையை குறைக்க பெரும்பாடுபட்டு கொண்டு இருக்கின்றார்கள்.
இதற்கு நாம் வீட்டிலே எளிய பயிற்சிகளை மேற்கொள்ள முடியும்.
அந்தவகையில் கிரஞ்சஸ் என சொல்லப்படும் பயிற்சி வயிற்று தசை பகுதிகளுக்கான வெகு முக்கிய பயிற்சி இதுவே முதன்மை ஆகும்.
தற்போது இந்த பயிற்சியினை எப்படி செய்வது என்பதை இங்கு பார்ப்போம்.
படத்தில் காட்டியவாறு முதலில் நேராக படுத்துக்கொண்டு காலை மடக்கி வைக்கவும்.
பிறகு கைகளை தலையின் பின்புறம் வைத்துக் கொண்டு மெதுவாக மேல் எழுப்பி வர வேண்டும் முடிந்த அளவு மேல் நோக்கி வர வேண்டும். ஆனால் கால்களை அசைக்க கூடாது..
இந்த பயிற்சியை தினமும் தொடர்ந்து 15 முறை செய்துவிட்டு 20 நொடிகள் ஓய்வு எடுக்க வேண்டும்.
பின் மீண்டும் பத்து முறை என தொடர்ந்து 3 செட்கள் செய்தல் நலம் படிப்படியாக வயிற்று பகுதியில் உள்ள சதை குறைவதை காணலாம்.
ஆரம்பத்தில் 2 செட் மட்டும் செய்தால் போதுமானது. படிப்படியாக இந்த பயிற்சியின் அளவை 2 செட்டியிலிருந்து அதிகரித்து 5 செட் வரை செய்யலாம்.