மலச்சிக்கலை கட்டுப்படுத்த இந்த பயிற்சியை செய்து பாருங்க

Report Print Kavitha in உடற்பயிற்சி

கொழுப்பு மிகுந்த உணவுகள் , நார்சத்து குறைந்த உணவுகள், மைதா கலந்த உணவுகள் சாப்பிடுவதால், குறைவான நீர் குடிப்பதால், மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்புண்டு.

இதனை வீட்டில் இருந்தே எளிய பயிற்சிகளின் மூலமாக இதனை சரி செய்ய முடியும்.

இந்த மலச்சிக்கலை கட்டுக்குள் வைத்திருக்கும் பயிற்சியை யோகவில் பவனமுத்தாசனம் என சொல்லப்படுகின்றது.

இந்த ஆசனத்தில் அடிவயிற்றில் அதிக அழுத்தம் தரப்படுகிறது. மலக்குடல் நெகிழ்த்தபட்டு மலச்சிக்கலை விடுவிக்கின்றது.

தற்போது இந்த பயிற்சியை எப்படி செய்வது என்பதை இங்கு பார்ப்போம்.

செய்முறை

முதலில் நேராக படுத்துக் கொள்ளுங்கள். கைகள் தரையில் பதிந்திருக்க வேண்டும். கால்கள் வளையாமல் நேராய் வைத்திருங்கள்.

இப்போது மேலே படத்தில் காட்டியது போல், இடது காலின் முட்டியை மடித்து, தொடை வயிற்றில் படுமாறு கொண்டு செல்லுங்கள்.

வலது கால் தரையிலேயே இருக்கவேண்டும். பின்னர் மெதுவாக தலையை தூக்கி, நெற்றில் இடது முட்டியில் படுமாறு வையுங்கள். இந்த நிலையிலேயே சில நொடிகள் இருக்க வேண்டும்.

ஆழ்ந்து மூச்சை விடுங்கள். பின்னர் இயல்பு நிலைக்கு வரவேண்டும். இடது காலில் செய்தது போல், இப்போது வலது காலுக்கும் செய்யுங்கள்.

இந்த யோகாவை ஒரே சமயத்தில் இரு கால்களிலும் சேர்ந்து செய்யலாம்.

பலன்கள்

மலச்சிக்கல் தீரும், ஜீரணம் அதிகரிக்கும். வாய்வு உருவாகாமல் தடுக்கும். மலக்குடல் பெருங்குடல் ஆகியவை நெகிழப்படும். நச்சுக்கள் வெளியேறும்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers