முதுகுவலியை எளிதில் குணமாக்க வேண்டுமா? இந்த பயிற்சியை செய்யுங்க

Report Print Kavitha in உடற்பயிற்சி

இன்றைய காலக்கட்டத்தில் வேலைக்கு செல்லும் ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி அடிக்கடி முதுகுவலி வருவதுண்டு.

இதற்காக நாம் ஜிம்மிற்கு தான் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு சில யோகப்பயிற்சிகள் மூலமும் இதனை சரி செய்ய முடியும்.

அந்தவகையில் முதுகு வலியை போக்கும் ஆசனத்திற்கு பெயர் ‘மர்ஜரி ஆசனம்’ ஆகும்.

மர்ஜரி என்றால் பூனை. பூனைபோல உடலை வளைத்து செய்வதால் இந்தப் பெயரால் அழைக்கப்படுகின்றது.

மேலும் இந்த பயிற்சியை தினமும் செய்துவர முதுகுவலி நன்கு குணமாகும் என்று சொல்லப்படுகின்றது.

தற்போது இந்த ஆசனத்தை எப்படி செய்வது என்பதை இங்கு பார்ப்போம்.

பயிற்சி

படத்தில் காட்டியவாறு முதலில் வஜ்ராசனத்தில் அமர வேண்டும். (முட்டி போட்டு நின்றபடி, பூனைபோல கைகளை முன்னால் ஊன்றிய நிலையில் இருக்க வேண்டும்).

கால் முட்டியை சற்று அகல மாக வைத்து, கைகள் அதற்கு நேராக இருக்குமாறு சரிசெய்துகொள்ள வேண்டும்.

மூச்சை உள் இழுக்கும்போது தலையை நன்றாக மேலே தூக்கிப் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் முதுகுப் பகுதி நன்கு வளைந்து, ஒரு பள்ளம்போல ஏற்படும். பிறகு மூச்சை விட்டவாறு பொறுமையாக குனிந்து நம்முடைய தாடை மார்பைத் தொடுவதுபோல நன்றாக குனிய வேண்டும்.

இந்த நிலையில், முதுகுப் பகுதி வளைந்து, ஒரு குன்று போல காணப்படும். இவ்வாறு மாற்றி மாற்றி 3-5 முறை செய்ய வேண்டும்.

பிறகு, மீண்டும் வஜ்ராசனத்தில் அமரலாம். அல்லது, அப்படியே குப்புறப் படுத்து ரிலாக்ஸ் செய்துவிட்டு, பிறகு, ஒருபுறமாகத் திரும்பி, மல்லாக்க படுத்து சாந்தி அல்லது சவாசனத்தில் 10-15 விநாடிகள் இருந்துவிட்டு எழலாம்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers