கை, கால்களுக்கு வலிமை பெற வேண்டுமா? அப்போ இந்த ஆசனத்தை செய்து பாருங்க

Report Print Kavitha in உடற்பயிற்சி

வயதாக வயதாக நமது கை, கால்கள் பலமிழந்து காணப்படும். இதனால் நாம் எந்த வேலையும் செய்ய விடமால் முடக்கி விடுகின்றது.

இதற்கு அன்றாடம் உடற்பயிற்சி மற்றும் யோகாசனம் செய்வது உடலுக்கு மிகுந்த உச்சாகத்தை தருகின்றது.

அந்தவகையில் கை, கால்கள் வலிமை பெற யோகசானத்தில் அதோமுக ஸ்வனாசனம் என்படும் பயிற்சி உதவி புரிகின்றது.

இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் கை, கால்களுக்கு வலு கிடைக்கும் எனப்படுகின்றது.

அந்தவகையில் தற்போது இந்த ஆசனத்தை எப்படி செய்யலாம் என இங்கு பார்ப்போம்.

செய்முறை

முதலில் படத்தில் காட்டியவாறு கைகள் மற்றும் கால்களை தரையில் ஊன்றி நிற்க வேண்டும்.

பின்னர் மெதுவாக மூச்சை வெளியேற்றியவாறு இடுப்பை சற்று உயர்த்தி, கைகளை முன்புறமாகவும், முழங்கால்களை பின்புறமாகவும் நீட்டி ‘V’ வடிவில் நிற்க வேண்டும்.

கைகள் இரண்டும் தோள்பட்டைகளை ஒட்டியும், கால்கள் இரண்டும் ஒட்டியும் இருப்பது நல்லது.

இப்போது தலையை குனிந்து வயிற்றை பார்த்த நிலையில் 10 நொடிகள் நிற்க வேண்டும். பின்னர் மெதுவாக பழைய நிலைக்கு திரும்புங்கள்.

பலன்கள்

தலைப்பகுதிக்கு ரத்த ஓட்டம் வேகமாக கிடைப்பதால் மன அழுத்தம் நீங்கி மன அமைதி கிடைக்கிறது.

உடலுக்கு உற்சாகம் கிடைக்கிறது. கைகளும் தோள்பட்டைகளும் இணையும் இடங்களில் உண்டாகும் உராய்வினால் வரும் வலிகள் நீங்குகிறது. கையின் மணிக்கட்டு, தசைநார்கள் நன்கு வளைந்து கொடுக்கின்றன.

கை, கால்களுக்கு வலு கிடைக்கிறது. இடுப்பு எலும்புகள், கணுக்கால் எலும்புகளுக்கு வலு சேர்க்கிறது.

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அசௌகரியங்களைப் போக்குகிறது.

கை,கால் மூட்டுகளில் ஏற்படும் தேய்மானத்தை குறைக்கிறது.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்