அந்தரங்கப் பகுதியின் தேவையற்ற கொழுப்புகளைக் குறைக்க வேண்டுமா? இந்த பயிற்சியை செய்திடுங்க

Report Print Kavitha in உடற்பயிற்சி

உங்கள் அந்தரங்கப் பகுதியின் தேவையற்ற கொழுப்புகளைக் குறைக்க உடற்பயிற்சிகள் பெரிதும் உதவி புரிகின்றது.

அந்தவகையில் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள உடற்பயிற்சிகளை செய்தாலே போதும் விரைவில் நல்ல பயன் கிடைக்கும். தற்போது அவற்றை பார்ப்போம்.

கால் பயிற்சி

தரையில் படுத்து crunches-ஐ செயல்படுத்துவது உங்கள் உடலில் நல்ல விளைவை ஏற்படுத்தி FUPA-வைக் குறைக்கிறது.

நின்றபடி செய்யும் crunch - களையும் செய்யுங்கள்.

நேராக நிற்கவும். இடுப்பின் மீது கைகளை வைத்து வயிற்றை உங்கள் முதுகெலும்பின் திசையில் இழுக்கவும்.

உங்கள் வயிற்றின் கீழ்பகுதி தசையில் குழிவை உருவாக்கி , உங்கள் முழங்காலை நேராக வைத்துக்கொண்டு மெதுவாக உங்கள் இடது காலை உயர்த்தவும்

3 விநாடிகள் காத்திருங்கள், பின்னர் மெதுவாக ஆரம்ப நிலைக்குத் திரும்பலாம்.

இதே போல 3 முறைகள் 10-15 ரிபிடேஷன் செய்யவும், ஒவ்வொரு முறைக்குப் பின்னர் கால்களை மாற்றிச் செய்யவும்.

ச்சேர் லிஃப்ட்

உங்களுடைய முதுகெலும்பு நாற்காலியின் பின்பகுதியில் நன்றாக ஓய்வெடுக்கும்படி அமரவும்.

நாற்காலியின் இரண்டு பக்கங்களைப் பற்றிக் கொண்டு, உங்கள் வயிற்றுத் தசைகள் நன்றாக நசுங்கும்படி இரண்டு பக்கமும் திரும்பவும்.

உங்கள் கால்களை நேராக்கி , நாற்காலிக்கு ஒரு அங்குலம் வரை படிப்படியாக அதை மேலே உயர்த்தவும்.

ஆரம்ப நிலைக்குத் திரும்புவதற்கு முன்னர் இந்த நிலையிலேயே சிறிது நேரம் நிறுத்திவைக்கவும்.

வழக்கமான இடைவெளியுடன் 15 செட்கள் 3 முறை செய்யவும்.

ரிவர்ஸ் கிரான்ச்சஸ்

கூரையைப் பார்த்தபடி தரையில் நீட்டிப் படுக்கவும்.

உங்கள் தலைக்குப் பின்னால் இரு கைகளையும் வைக்கவும்.

தரையில் ஒரு 90 டிகிரி கோணத்தில் உங்கள் முழங்கால்களை வளைக்கவும்.

உங்கள் முழங்கால்களை வயிற்றுத் தசை இறுகும் படி உள்நோக்கி இழுக்கவும்.

உங்கள் பின்பக்கத்தை நேராக வைத்தபடி 10 விநாடிகளுக்கு அப்படியே வைத்திருக்கவும்.

இதேபோல் மீண்டும் செய்ய ஆரம்ப நிலைக்குத் திரும்பவும்.

ஒவ்வொரு இண்டெர்வெலுக்கும் இடையே தேவையான இடைவெளிகளுடன் 15 ரிபிடேஷன்களை 2 செட் செய்யவும்.

பிளேன்க்ஸ் (planks)

இந்த பயிற்சியைச் செய்ய, தண்டால் பொசிஷனைப் பின்பற்றவும்.

தரையில் உங்கள் முழங்கைகளை வைத்து உள்ளங்கைகளை ஓய்வு நிலையில் வைக்கவும்.

உங்கள் கால்விரல்களில் நின்று முழங்கைகள் மற்றும் கால்விரல்களில் மட்டுமே உங்கள் உடலை சமநிலையில் வைக்கவும்.

இப்போது உங்கள் உடலை மேல்நோக்கி உயர்த்தி, ஒரு நேர்க்கோட்டில் கொண்டு வாருங்கள்.

இதே நிலையில் 30 முதல் 45 வினாடிகள் வரை ஹோல்டு செய்யுங்கள்.

ஒவ்வொரு செட் இடையே வழக்கமான இடைவெளிகளுடன் ஒவ்வொரு நாளும் மூன்று செட்களைச் செய்யவும்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்