முதுகு வலி மற்றும் இடுப்பு வலியிலிருந்து நிவாரணம் பெற வேண்டுமா? இதோ எளிய பயிற்சி

Report Print Kavitha in உடற்பயிற்சி

இன்றைய காலகட்டத்தில் பொதுவாக அனைவரும் சந்திக்கும் பிரச்னைகளுள் இடுப்புவலி, கழுத்து வலி முக்கிய இடம் பெறுகின்றனர்.

ஒருவர் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்வதனால் இது போன்ற பிரச்னையை அடிக்கடி சந்திக்கின்றனர்.

அந்தவகையில் இதுபோன்ற பிரச்னையிலிருந்து விடுபட யோகசான பயிற்சிகள் பெரிதும் உதவி புரிகின்றது.

அதில் “ஊர்த்வ முக ஸ்வனாசனம்” என்ற பயிற்சியை தொடர்ந்து செய்யும் போது இடுப்பு மேல்பகுதி கீழ்பகுதி வலுவடைவதால் முதுகுவலி இடுப்பு வலியிலிருந்து நிவாரணத்தை அளிகின்றது.

அதுமட்டுமின்றி இந்த பயிற்சி செய்வதனால் உடலில் உள்ள பல்வேறு நோய்களுக்கு தீர்வளிக்கின்றது.

அந்தவகையில் தற்போது இந்த பயிற்சியை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

செய்முறை

முதலில் யோகா விரிப்பில் வயிற்றுப்பகுதி தரையில் படுமாறு கால்களை நீட்டி படுக்க வேண்டும்.

பாதங்களையும் முன்கைகளையும் தரையில் ஊன்றி இடுப்பை மட்டும் சற்றே மேலே தூக்க வேண்டும்.

உடல் எடை முழுவதும் பாதங்களிலும் கைகளிலும் தாங்கியவாறு தலையை மேலே உயர்த்திப் பார்க்க வேண்டும்.

தோள்பட்டையை ஒட்டி கைகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

மூச்சை உள்ளிழுத்த நிலையில் 10 வினாடிகள் இருக்க வேண்டும்.

மூச்சை வெளியேற்றியவாறு பழைய நிலைக்குத் திரும்புங்கள். இவ்வாறு 3 முதல் 5 முறை செய்ய வேண்டும்.

நன்மைகள்
  • மணிக்கட்டுகள் தோள்பட்டை எலும்புகள் வலுவடைகின்றன.
  • இடுப்பின் கீழ்பகுதி தசைகள் தளர்ந்து வலுவடைகின்றன.
  • மார்பு மற்றும் தோள் தசைகள் விரிவடைகின்றன.
  • அடிவயிற்று தசைகள் மற்றும் உறுப்புள் சமநிலைப்படுகிறது.
  • தொப்பை குறைந்து கூன் நீங்கி உடல் தோற்றம் சீராகிறது. இதயம் வலுவடைகிறது.
  • இடுப்பு மேல்பகுதி கீழ்பகுதி வலுவடைவதால் முதுகுவலி இடுப்பு வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
  • சியாடிக்கா என்னும் கெண்டைக்கால் வலியைப் போக்குகிறது.
  • மார்பு விரிவடைவதால் நுரையீரல் அடைப்பு நீங்கி ஆஸ்துமா நோயிலிருந்து குணம் பெறலாம்.
  • தலையை மேல்நோக்கி பார்க்கும் போது மூளைக்கு பிராணவாயு கிடைப்பதால் தலைவலி தலைசுற்றல் நீங்குகிறது.
  • தைராய்டு சுரப்பு சமநிலை அடைந்து தைராய்டு கட்டி கரைகிறது.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்