வெற்றுக்காலுடன் ஓடுதல், நடைப் பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா?

Report Print Givitharan Givitharan in உடற்பயிற்சி

ஒரு காலத்தில் உடற்பயிற்சி செய்வதற்காக விலையுயர்ந்த காலணி போன்ற உடற்பயிற்சி உபகரணங்களை மக்கள் அதிகமாக பயன்படுத்தி வந்தனர்.

எனினும் தற்போது அதன் தேவைகளை குறைத்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக தற்போது வெற்றுக்காலுடன் நடைப் பயிற்சி மேற்கொள்வது, ஓடுவது என்பன ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

இவ்வாறான மாற்றம் உண்மையில் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதாகும்.

இதற்கு பல காரணங்களை பட்டியலிடமுடியும்.

முக்கியமாக மனிதனின் கால் மற்றும் பாதங்கள் ஓடும்போது, நடக்கும்போது ஏற்படும் அழுத்தங்களை தாங்கக்கூடிய வகையில் காணப்படுகின்றன.

எனவே காலணிகளை அணிந்து ஓடும்போது அல்லது நடக்கும்போது தசைகளில் திருப்பங்களை ஏற்படுத்துவதுடன், பலவீனத்தையும் ஏற்படுத்தும்.

தவிர தசைகள், பாதங்களின் வினைத்திறன் குறைவடைவதோடு, நிலத்தினால் மீள வழங்கப்படும் உதைப்பினால் உட்காயங்கள் ஏற்படக்கூடிய சாத்தியமும் அதிகரிக்கின்றது.

வெறும்காலுடன் ஓடும்போது முழங்கால்கள் மற்றும் இடுப்புக்களில் சுளுக்குகள் ஏற்படக்கூடிய சாத்தியம் வெகுவாக குறைக்கப்படுகின்றது.

எனவே இந்த இயற்கையான உடற்பயிற்சியானது எலும்பு தொடர்பான பாதிப்புக்களில் இருந்து விடுபடுவதற்கும், முழங்கால் வலியிலிருந்து விடுபடுவதற்கும் உதவுவதுடன், பாதங்கள் வலிமையடைவதற்கும் ஏதுவாக அமைகின்றது.

எவ்வாறெனினும் வெறும் காலுடன் ஓடும்போதும் சரியான நிலையைப் பேண வேண்டும்.

தவறின் குதிக்கால் வலி ஏற்படுவதற்கான சாத்தியமும் உண்டு.

எனவே பாதங்கள் முழுமையாக தரையில் படும்படியாக ஓட வேண்டும்.

அதேபோன்று பிரண்டை திருப்பங்கள் உடையவர்கள் வெறும் காலுடன் நீண்ட தூரம் ஓடுவதையும் தவிர்க்க வேண்டும்.

இவர்கள் சிறிய அளவு தூரத்திற்கு ஓடி பயிற்சி செய்வது சாலச்சிறந்தது.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்