கண்ணை சுற்றி ஏற்படும் வலியை குறைக்க வேண்டுமா? அப்போ இந்த பயிற்சியை செய்து பாருங்கள்

Report Print Kavitha in உடற்பயிற்சி

இன்றைய காலகட்டத்தில் மொபைல் போன்கள் கையில் இல்லாதவர் எவருமே இல்லை என்று தான் சொல்ல முடியும்.

இதனால் பல உடல் நல மற்றும் மனநல பிரச்னைகளும் ஏற்படுகின்றன.

இதில் முக்கியமானது தான் கண்பிரச்னை. ஏனென்றால் மணிக்கணக்காக மொபைல் பார்ப்பது, கணினி வேலை, பிடித்த புத்தகத்தை மங்கலான ஒளியில் படிப்பது போன்றவை எளிதில் உங்கள் கண்களை சோர்வடையச் செய்து விடும்.

இதனால் கண்களில் வலி, அசதி, கண்ணீர் வடிதல் போன்றவை ஏற்படுகின்றது.

இதிலிருந்து நிவாரணம் பெற சோர்வடைந்த கண்களுக்கென்றே நிறைய பயிற்சிகள் உள்ளன.

அந்தவகையில் கண்களில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து கண் பார்வை திறனை மேம்படுத்த சில எளிய பயிற்சி பற்றி இங்கு பார்ப்போம்.

கண்களை ஒற்றி எடுத்தல்

முதலில் செளகரியமாக நேராக உட்கார்ந்து கொள்ளுங்கள்

கண்களை மூடி மூச்சை இழுத்து கொள்ளுங்கள்

இப்பொழுது இமைகளின் மேல் விரல்களை வைத்து 10 நிமிடங்கள் லேசாக அழுத்தம் கொடுங்கள்

2 விநாடிகளுக்கு ஒரு முறை விட்டு விட்டு செய்யுங்கள்

பிறகு மறுபடியும் அழுத்தம் கொடுங்கள். இப்படியே செய்து வாருங்கள். கண்களில் உள்ள சோர்வு போய்விடும்.

ரப் டவுன் பயிற்சி

உங்களுக்கு செளகரியமாக நின்றோ அல்லது அமர்ந்தோ கொள்ளுங்கள்

உங்கள் உள்ளங்கைகளை நன்றாக சூடாகும் படி தேயுங்கள்

இப்பொழுது கண்களை மூடிக் கொண்டு இமைகளின் மேல் உள்ளங்கைகளை வையுங்கள்

கைகளில் உள்ள வெப்பம் இமைகளில் படர்வதை உணரலாம்

அருகில் மற்றும் தொலைவு பயிற்சி

உங்களது பெருவிரலை முகத்தில் இருந்து 10 அங்குலம் தள்ளி வைத்துக் கொள்ளுங்கள்.

15 நிமிடங்கள் அதையே பாருங்கள்

அடுத்து 10 மற்றும் 20 அடி தூரத்தில் உள்ள பொருட்களையே பாருங்கள்

15 நிமிடங்கள் பார்க்க வேண்டும்

அப்புறம் பெருவிரலை பாருங்கள். இப்படி மாத்தி மாத்தியே 5 தடவை செய்யுங்கள்

உள்ளங்கை கண் பயிற்சி

ஒரு சேர் அல்லது அமர்ந்து கொள்ளுங்கள். இப்பொழுது உங்களுக்கு முன்னாடியுள்ள மேஜையில் முழங்கைகளை வைத்துக் கொண்டு கண்களை ஒற்றி எடுங்கள்

செய்யும் போது மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடவும்

கொஞ்சம் ரிலாக்ஸ் ஆன பிறகு மறுபடியும் 30 விநாடிகள் கழித்து திரும்ப செய்யுங்கள்.

பக்கவாட்டு கண் பயிற்சி

நேராக நிமிர்ந்து உட்கார்ந்தோ அல்லது நில்லுங்கள்

தலையை அசைக்காமல் உங்கள் பக்கவாட்டில் உள்ள பொருட்களை பாருங்கள்.

இப்படி வலது மற்றும் இடது புறமாக பார்த்து ஒரு பொருளின் மீது கவனம் செலுத்துங்கள்.

இப்படி 5 தடவை அந்த பக்கம் இந்த பக்கமாக கருவிழியை ஓட விடுங்கள்.

3 தடவை திரும்பவும் செய்யவும்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்