தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்யும்போது இந்த 5 விடயங்களும் நிகழும்

Report Print Givitharan Givitharan in உடற்பயிற்சி

அனேகமானவர்கள் தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்து வருகின்றனர்.

இது அவர்களின் உடல் எடையை குறைப்பதற்காகவோ அல்லது தசைகளை வலுப்படுத்துவதற்காகவோ இருக்கலாம்.

எவ்வாறெனினும் தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்யும்போது 5 வினோதமான மாற்றங்கள் அல்லது செயற்பாடுகள் இடம்பெறும்.

தசைகளில் கிழிவு ஏற்படும்

உடற்பாகங்களில் காணப்படும் இயைபாக்கமடையாத தசைகளில் கிழிவு ஏற்படும். எனினும் நாளடைவில் அவை வலிமையடையவும், பெரிதாக வளரவும் உதவியாக இருக்கும்.

மலம் கழிப்பது இலகுவானதாக மாற்றம்பெறும்

உடற்பயிற்சியின்போது குடலின் அசைவுகள் அதிகப்படுத்தப்படுவதுடன், சந்தத்திற்கு ஏற்றவாறு அசைவை ஏற்படுத்தும்.

எனவே தொடர்ந்தும் அசைந்துகொண்டிருக்கும் குடல் காரணமாக மலம் கழிப்பது இலகுவாக்கப்படுகின்றது.

மூளையின் செயற்பாடு மேம்படுத்தப்படுகின்றது

அதாவது உடற்பயிற்சி செய்யும்போது இதயத்துடிப்பானது அதிகரிக்கின்றது. இதனால் மூளைக்கான ரத்த ஓட்டம் அதிகரிக்கப்படும்.

எனவே மூளையின் செயற்பாடு அதிகரிப்பதுடன், அல்ஸைமர், பார்க்கின்ஸன் போன்ற நோய்கள் ஏற்படுவதிலிருந்து பாதுகாப்பு பெற முடியும்.

ஆரோக்கியமான தாம்பத்திய உறவினை தக்கவைக்கும்

ரத்த ஓட்டத்தினை மூளையை நோக்கி மாத்திரமல்லாது உடலின் அனைத்து பகுதிகளுக்கும் செலுத்தப்படும்.

இதனால் உடலுள்ள இழையங்களை தூண்டக்கூடியதாகவும் காணப்படுகின்றது.

சிறந்த தூக்கத்தை வரவழைக்கும்

நாள் ஒன்றிற்கு 30 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்வதானது தூக்கத்தின் திறனை 65 சதவீதத்தினால் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதேவேளை உடற்சூட்டினை தணிப்பதுடன், மன அழுத்தங்களிலும் இருந்து விடுபடுவதனால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்