கால், முட்டி, முதுகு வலி குணமாக வேண்டுமா? இந்த பயிற்சியை செய்திடுங்க

Report Print Kavitha in உடற்பயிற்சி

பொதுவாக நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்னைகளில் கால், முட்டி, முதுகு வலி போன்றவை முக்கிய இடம் பெறுகின்றது.

இதனை மருந்து மாத்திரைகளின்றி எளிய உடற்பயிற்சிகள் மூலம் இதிலிருந்து விடுபடலாம்.

அந்தவகையில் தற்போது கால், முட்டி, முதுகு வலியை குணமாகும் “ஹீல் பயிற்சி” என்ற பயிற்சியினை எப்படி செய்யலாம் என பார்ப்போம்.

பயிற்சி

முதலில் விரிப்பில் நேராக நின்று கைகளை இடுப்பில் வைத்துக் கொள்ளவும்.

முன் கால் விரல்களை தரையில் பதித்தபடி நின்று கொண்டு பின்னங்கால் பாதத்தை முடிந்தவரை உயர்த்தி பின் கீழ் இறக்கி தரையை தொடாமல் மீண்டும் உயர்த்தவும்.

இதுபோல் 20 எண்ணிக்கையில் இரண்டு செட்கள் செய்ய வேண்டும்.

இவ்வாறு இந்த பயிற்சியை தினமும் 3 வேளைகள் என தொடர்ந்து 3 மாதம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இந்த பயிற்சி செய்வதால் தண்டந்தசை வலுப்பெறும். முட்டி வலி, முதுகு வலி குணமாகும். கணுக்கால் வலியைப் போக்கும்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்