நாம் நாள் முழுக்க உடலும் மனமும் புத்துணர்ச்சியோடும் சுறுசுறுப்போடும் இருக்க உடற்பயிற்சி பெரிதும் உதவி புரிகின்றது.
அந்தவகையில் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
ஜம்ப் அண்ட் ஸ்குவாட் (Jump and Squat)
fitwithme.org
தரையில் நேராக நின்று, இரு கைகளையும் கோத்து மார்புக்கு முன்பாக வைக்க வேண்டும். இப்போது, பாதி அமர்ந்த நிலையில் உடலை பேலன்ஸ் செய்தபடி இருக்க வேண்டும்.
பிறகு, அப்படியே மேல் நோக்கிக் குதித்து, மீண்டும் பழையநிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோல், 15 முறை செய்ய வேண்டும்.
இதனால் சீரான இதயத் துடிப்புக்கு உதவும். உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து, உடல் எடையைக் குறைக்கும். காலின் வடிவமைப்பை மேம்படுத்தும்.
சுமோ ஸ்டெபிலிட்டி ஹோல்டு (Sumo Stability Hold)
POPSUGAR Photography / Kathryna Hancock
கால்களை நன்றாக விரித்து நேராக நிற்க வேண்டும். கைகளில், இரண்டு டம்பிள்ஸை ஏந்தியபடி, தாடைக்கு அருகே வைக்க வேண்டும். இப்போது, நாற்காலியில் உட்காருவதுபோல, உட்கார்ந்து எழ வேண்டும்.
உட்காரும்போது, சுமோ வீரரைப் போன்ற தோற்றம் கிடைக்கும். இப்படி 15 முறை செய்ய வேண்டும்.
இதனால் உடலை உறுதியாக்கும். இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பைக் குறைத்து, ஃபிட் ஆக்கும். கால்களில் ஏற்படும் நடுக்கம் குறையும்.
லஞ்சஸ் (Lunges)
gethealthyu
தரையில் நேராக நிற்க வேண்டும். பின், இரண்டு கால்களையும் முன் பின்னாக நன்கு விரித்துவைக்க வேண்டும்.
இப்போது, வலது காலைச் சற்று முன் நோக்கி மடக்கி, இடது காலை முட்டியிட்ட நிலையில்வைத்திருக்க வேண்டும்.
சில விநாடிகள் கழித்து, படிப்படியாக மீண்டும் பழையநிலைக்குத் திரும்ப வேண்டும்.
இதேபோன்று, இடது காலை மடக்கி, வலது காலை முட்டி போட்ட நிலையில் செய்ய வேண்டும். இது ஒரு செட். இப்படி 15 முறை செய்ய வேண்டும்.
இதனால் உடலில் அதிகமாக உள்ள கலோரியின் அளவைக் குறைக்கும். கால் மற்றும் முட்டியின் வலிமை அதிகரிக்கும். கால்களில் உள்ள தசைப்பகுதி வலுவடையும்.
ரோமன் ட்விஸ்ட் பயிற்சி (Roman Twist Exercise)
Google
தரையில் கால்களை நீட்டி அமர வேண்டும். கைகளில் மெடிசின் பந்தைத் தாங்கி, இடது பக்கம் வைத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது கால்களை உயர்த்தி, உடலைச் சற்று பின்புறம் சாய்த்து சைக்கிளிங் பெடல் மிதிப்பதுபோல, 15 முறை கால்களைச் சுற்ற வேண்டும்.
மீண்டும் கால்களைத் தரையில் வைத்துவிட்டு, சில விநாடிகள் கழித்துப் பந்தை வலது மார்பின் அருகே வைத்துக் கால்களை உயர்த்தி, உடலைச் சற்று பின்புறம் சாய்த்து, சைக்கிளிங் செல்வதுபோல 15 முறை சுற்ற வேண்டும்.
இதனால் கால்களில் சீரான ரத்த ஓட்டம் பாயும். இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும். உடலின் நிலைத்தன்மை மேம்படும்.