உடற்பயிற்சி செய்வதற்கு முன் அவசியம் இவ் உணவுகள் உண்ணுவதை தவிர்க்க வேண்டும்

Report Print Givitharan Givitharan in உடற்பயிற்சி

அனேகமானவர்கள் தமது உடலை திடகாத்திரமாக வைத்திருப்பதற்கும், எடையைக் குறைப்பதற்கும் ஜிம் உட்பட பல்வேறு உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுவாக உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் அதிக உணவுகளை உள்ளெடுக்கக்கூடாது என்ற அறிவுரை ஏற்கனவே கூறப்படுகின்ற ஒன்றுதான்.

ஆனாலும் சில வகையான உணவுகளை அறவே உள்ளெடுக்கக்கூடாது.

அவ்வாறான உணவுகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

இந்த வரிசையில் முதலில் காணப்படுவது காபனேற்றப்பட்ட உணவு வகைகள் ஆகும்.

அதாவது ஸ்பிரைட், கொகா கோலா, பெப்சி போன்ற குளிர்பானங்கள் காபனேற்றப்பட்டிருக்கும்.

இவற்றினை உடற்பயிற்சி செய்வதற்கு முன் உள்ளெடுக்கக்கூடாது.

மாறாக இரண்டு அல்லது மூன்று கிளாஸ் நீரை உடற்பயிற்சி செய்வதற்கு முன் 2 அல்லது 3 மணித்தியாலங்களுக்கு முன்னர் குடிக்கலாம்.

அதேபோன்று பால் அருந்துவதையும் தவிர்க்க வேண்டும்.

பொதுவாக பால் ஊட்டச்சத்து நிறைந்த பானமாகும்.

இதனால் உடற்பயிற்சிக்கு மிகவும் உகந்தாக இருக்கும் என எண்ணுவார்கள்.

ஆனால் பால் அருந்திய பின்னர் உடற்பயிற்சி செய்யும்போது குமட்டலை ஏற்படுத்துவதுடன், வாயு நிறைந்திருப்பது போன்ற உணர்வையும் ஏற்படுத்தும்.

எனவே சீஸ், யோகட், பால் போன்றவற்றினை உடற்பயிற்சிக்கு பின்னர் உட்கொள்வது சிறந்ததாகும்.

இவற்றினைப் போன்று பருப்பு வகை உணவுகளையும் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

பருப்பு வகைளில் புரதச்சத்து அதிகம் காணப்படுகின்ற போதிலும் நார்ச்சத்தும் அதிகமாக இருக்கும்.

இவ்வாறு நார்ச்சத்து அதிகமாக இருப்பதனால் சமிபாடு அடைய நீண்ட நேரம் ஆகும்.

எனவே இது உடற்பயிற்சி செய்யும்போது அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

அதேபோன்று உடற்பயிற்சிக்கு முன்னர் காரமான உணவுகளை உட்கொள்வதும் புத்திசாலித்தனம் இல்லை.

இவை உடற்பயிற்சியின்போது நெஞ்செரிவை ஏற்படுத்துவதுடன் வேறு கோளாறுகளையும் ஏற்படுத்தக்கூடியன.

இவ்வாறான உணவுகள் உங்களது உடற்பயிற்சி ஆர்வத்தினை குறைக்க தூண்டுவதனால் உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் உண்பதை தவிர்ப்பது சிறந்தாகும்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்