மருந்து மாத்திரை இன்றி மூட்டுவலியை போக்குவதற்கான வழிமுறைகள்

Report Print Givitharan Givitharan in உடற்பயிற்சி

மூட்டுவலி என்பது மூட்டுகள், தசைநார்கள் மற்றும் கால்கள் அல்லது கைகளில் உள்ள தசைகளைச் சுற்றியுள்ள திசுக்களைச் சுற்றியுள்ள வலி மற்றும் நாள்பட்ட அழற்சியை ஏற்படுத்துகிறது.

இதனை எந்தவிதமான மருந்து மாத்திரைகளையும் பயன்படுத்தாது குணப்படுத்தக்கூடிய வழிமுறைகள் காணப்படுகின்றன.

டாய் சி உடற்பயிற்சி(Tai Chi)

டாய் சி என்பது குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தும் சீன உடற்பயிற்சி ஆகும்.

இது தசைகளில் மென்மையை ஏற்படுத்தும் திரவ இயக்கங்களை ஏற்படுத்துவதன் மூலம் பயனளிக்கின்றது.

2013 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், இந்த உடற்பயிற்சி முறை வலி மற்றும் விறைப்பைக் குறைப்பதிலும் வீக்கத்தைக் குறைப்பதிலும் பயனளிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

மசாஜ் செய்தல்

இது தசைகளை தளர்த்துவதற்கும் அதே நேரத்தில் இரத்த ஓட்டத்தை தூண்டுவதற்கும் ஊக்குவிப்பதற்கும் உதவுகின்றன.

குளிர் மசாஜ் வலியைக் குறைப்பதுடன், தசை வீக்கம் மற்றும் விரிவடைவதைக் குறைக்கிறது, மேலும் சூடான சிகிச்சை மூட்டுகளின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது.

அக்குபஞ்சர்

பாதிக்கப்பட்ட இடத்தில் உள்ள தூண்டுதல் புள்ளிகளில் சிறிய, நேர்த்தியான அளவிலான ஊசிகளால் தோலில் குத்தப்படும்.

இதன் நன்மைகள் மற்றும் செயல்திறன் இன்னும் அறிவியல் ரீதியில் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும் இம் முறையானது மூட்டுவலிக்கு நிவாரணம் தரக்கூடியதாக இருக்கின்றது.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்