இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுறீங்களா? அப்ப ஆசனங்களை செய்யுங்க

Report Print Kavitha in உடற்பயிற்சி

பொதுவாக நம்மில் பலர் இரவில் தூக்கமில்லாமல் தவித்து கொண்டு வருகின்றனர்.

தூக்கம் இல்லாமல் இருந்தால் இருதய நோய் பாதிப்பு அபாயம், களைப்பு அதிகமாகும்.

இதனை தவிர்க்க வேண்டுமாயின் உடலுக்கு ஓய்வு அளிக்கும் நல்ல தூக்கத்தை வரவழைக்கும் யோகாசனங்கள் சிலவற்றை வீட்டில் இருந்தப்படி செய்தாலே போதும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

சவாசனம்

இந்த ஆசனம் மன நலம் தர வல்லதாக அறியப்படுகிறது. அமைதியான பகுதியைத் தேர்வு செய்து யோகா பாய் மீது படுத்துக்கொள்ளவும். கால் பாதங்களை கொஞ்சம் அகலமாக வைத்துக்கொள்ளவும்.

அவை பக்கவாட்டில் இருக்கட்டும். கைகளையும் வரித்தபடி, உள்ளங்காலை மேலே பார்த்தபடி இயல்பாக இருக்கட்டும்.

உடலின் மீது எந்த அழுத்தமும் வேண்டாம். கண்களை மூடியபடி மூச்சுவிடுவதில் கவனம் செலுத்தவும்.

அடிவயிற்றில் இருந்து சுவாசிக்கவும். மூச்சை உள்ளே இழுக்கும் போது 5 என்ணவும், ஐந்து எண்ணியபடி மூச்சை வெளியே விடவும். நன்றாக உணரும் வரை இவ்வாறு செய்யவும்.

விபரிதகாரனி

இந்த ஆசனத்திற்காக சுவரை பார்த்து, அப்படியே படுத்துக்கொள்ளவும். கால்களை உயர்த்தி, பின் பகுதி சுவர் மீது படும்படி வைத்திருக்கவும்.

பாதம் மேல் பக்கம் பார்த்திருக்க வேண்டும். 90 டிகிரியில் கால்களை வைத்திருக்க முடியும்போது இடுப்பு பகுதியை உயர்த்தி, கீழ் குஷன் வைக்கவும்.

5 நிமிடத்திற்கு பின் பழைய நிலைக்கு வரவும்.

பாலசனம்

காலை மடக்கி கொண்டு,குதிகால் மீது அமர்ந்து கொள்ளவும். மூச்சை உள்ளிழுத்தபடி, முழங்காலை அகலமாக விரிக்கவும்.

முன்னே குணிந்து, உடலை தொடைப்பகுதிக்கு இடையே வைத்து,மூச்சை இழுத்துவிடவும்.

முதுகை நிமிரச்செய்து, தலையை நன்றாக உயர்த்தி, கைகளை முன் வைத்து, முழங்கை மற்றும் முழங்கால் ஒரு கோட்டில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். 30 நொடிகள் இவ்வாறு இருந்து பழைய நிலைக்கு திரும்பவும்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்