ஒரு மாதத்தில் உடல் எடையை குறைக்க வேண்டுமா? இந்த பயிற்சிகளை செய்தாலே போதும்

Report Print Kavitha in உடற்பயிற்சி

உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் வீட்டில் இருந்தே கூட எளிய பயிற்சிகளை மேற்கொண்டால் 1 மாதத்திற்குள் எடையினை குறைக்க முடியும்.

அந்தவகையில் தற்போது ஒரு மாதத்தில் உடல் எடையை குறைக்க என்னென்ன பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என பார்ப்போம்.

  • காலை இரண்டையும் அகட்டி வைத்துக்கொண்டு கைகள் இரண்டையின் முன் நீட்டி உட்கார்ந்து எழுவது ஸ்குவாட். இது அடித் தொடை, முட்டி ஆகியவற்றை வலுப்படுத்தும். தினமும் 30 ஸ்குவாட் செய்வது நல்லது. இதனை மூன்று செட்களாக பிரித்து செய்ய வேண்டும்.

  • நெடுஞ்சாண்கிடையாக விழுந்து எழுந்து பின்னர் எழுந்து கைகள் இரண்டையும் மேலே தூக்கி குதிக்க வேண்டும். இவ்வாறாக 30 தடவை செய்ய வேண்டும்.

  • கை கால்களை பக்கவாட்டில் தூக்கி குதிப்பது ஜம்பிங் ஜேக். இது அடிவயிறு, தோள், மார்புப்பகுதிக்கு சிறந்த பயிற்சி.

  • நேராக நின்று முதலில் வலது காலை ஒரு அடி முன்வைத்து பின்னர் நேராக நிற்கவும். பின்னர் அதேபோல இடது காலை முன் வைக்கவும். இவ்வாறு 30 தடவை செய்யவும்.

  • புஷ் அப்ஸ் எனப்படும் தண்டால் தோள், மார்பு, பைசெப்ஸ், டிரைசெப்ஸ் ஆகிய பகுதிகளுக்கு நல்ல பயிற்சி ஆகும்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்