தினமும் ஜாகிங் செல்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

Report Print Kavitha in உடற்பயிற்சி
208Shares

வயது வித்தியாசமின்றி அனைவரும் மேற்கொள்ள ஏற்ற உடற்பயிற்சியில் ஒன்றுதான் மெல்லோட்டம் (Jogging) ஆகும்.

ஏனெனில் 30 வயதிற்கு மேல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில் உடற்பயிற்சி அவசியம்.

வயதானவர்களுக்கு நடைபயிற்சி மற்றும் மெல்லோட்டம் போன்ற பயிற்சிகளை மட்டும் செய்து வந்தால் போதுமானது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தினமும் 30 நிமிடம் மெல்லோட்ட பயிற்சியை செய்து வந்தால் உடலுக்கு நல்ல ஆரோக்கிய பலனை தருகின்றது. தற்போது அது என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

  • நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டுகிறது.
  • கிருமிகளை எதிர்த்துப் போராடும் இரத்த வெள்ளையணுக்களை வீரியத்துடன் செயல்படச் செய்கிறது.
  • நம் உணவின் மூலம் நம் உடலில் தோன்றும் கிடோன், யூரியா, லாக்டிக் அமிலம், ஹிஸ்டோமைன், பிராடி ஹிஸ்டோமைன் போன்ற கழிவுப் பொருட்கள் வெளியேற வழி செய்கிறது.
  • இரத்த ஓட்டம் சீரடைவதுடன் மயிரிழையை விட பத்து மடங்கு நுண்ணிய தந்துகிகள் வரை பாய்ந்து இறந்த செல்களை உயிர்பிக்கின்றது.
  • மெல்லோட்டத்தின் போது உடலின் அதிக அளவு கொழுப்பு கரைகிறது.
  • நுரையீரல், சிறுநீரகம், ஜீரண மண்டல உறுப்புக்கள், பித்தப் பை, கணையம், கல்லீரல் போன்ற உறுப்புக்கள் சீராக இயங்கத் தொடங்குகின்றன.
  • மெல்லோட்டத்தின் போது நம் உடலில் சுரக்கும் Endorphins என்னும் திரவம் மன அழுத்தத்தைக் குறைக்கிறது

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்