மாதவிடாயின் போதும் உடற்பயிற்சி செய்யலாமா? கூடாதா?

Report Print Kavitha in உடற்பயிற்சி
161Shares

பொதுவாக சில பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் உடற்பயிற்சி செய்யலாமா? கூடாதா? என்ற சந்தேகம் காணப்படும்.

உண்மையில் உடற்பயிற்சியானது நல்ல ஹார்மோன்கள் மற்றும் எண்டோர்பின்களின் வெளியீட்டை தூண்டுகிறது . இது உங்கள் மனநிலையை உயர்த்துவதோடு உங்களுக்கு நல்ல விதமான உணர்வுகளையும் ஏற்படுத்தும்.

எண்டோர்பின்கள் என்பவை இயற்கையான வலி நிவாரணியாக செயல்படுவதால் மாதவிடாய் காலத்தில் இது உதவியாக இருக்கிறது.

இது மாதவிடாய் காலத்தில் இது உங்களுக்கு ஏற்படும் பிடிப்புகள், தலைவலி மற்றும் முதுகு வலியை போக்கும்.

எனவே மாதவிடாய் காலக்கட்டத்தில் உடற்பயிற்சியை மேற்கொள்வதே நல்லது ஆகும். ஆனால் மிகவும் தீவிரமான உடற்பயிற்சியை மேற்கொள்ளவது தவறு.

அந்தவகையில் இதுபோன்ற சமயங்களில் செய்யக்கூடிய உடற்பயிற்சி என்னெல்லாம் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

​மாதவிடாய் காலத்தில் செய்யக்கூடிய உடற்பயிற்சிகள்
  • பூங்காவில் உலாவுதல் அல்லது கொஞ்சம் வேகமாக நடத்தல் போன்றவற்றை செய்யலாம்.
  • லேசான ஜாக்கிங்கை மேற்கொள்ளலாம். இது உங்களை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். இதற்காக மெதுவாக ஓடினால் போதும்.
  • உங்கள் மாதவிடாய் நாளுக்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு யோகா மற்றும் பைலேட்ஸ் எனப்படும் உடற்பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்ளலாம். இது உங்கள் உடலை தளர்த்தவும், மாதவிடாயின் போது தசைப்பிடிப்பு, தசை சோர்வு ஆகியவற்றை குறைக்கவும் உதவும்.
  • முதுகு வலிக்கு உள்ளாகி உள்ளீர்கள் என்றால் உங்கள் முதுகெலும்பையும் பின்புறத்தையும் நீட்டிகும் ரோல் டவுன் எனப்படும் உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம்.
  • நீச்சல் குறைந்த தாக்கத்தை ஏற்படுத்த கூடிய உடற்பயிற்சியாகும். இது உங்கள் உடலை நிதானப்படுத்தவும் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிடிப்புகளை அகற்றவும் உதவுகிறது.
​மாதவிடாய் காலத்தில் தவிர்க்க வேண்டிய சில உடற்பயிற்சி முறை

  • தலைகீழ் யோகா முறை அதாவது உங்கள் தலை பூமியில் இருப்பது போன்ற யோகா முறைகளை தவிர்க்க வேண்டும்.

  • தோள்பட்டை நிலை யோகா இன்னும் சில யோகா நிலைகளை மாதவிடாய் சமயத்தில் செய்ய வேண்டாம். தலைக்கீழ் நிற்கும் யோகா முறையானது கருப்பையில் வாஸ்குலார் நெரிசலுக்கு வழி வகுக்கும். இதனால் மாதவிடாய் அதிகமாவதற்கான வாய்ப்புகள் உண்டு.

  • இடுப்பு வலி இருக்கும்போது இடுப்பு தொடர்பான உடற்பயிற்சியானது உங்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும். எனவே தீவிரமான கடுமையான உடற்பயிற்சிகளை இந்த நேரத்தில் தவிர்ப்பது நல்லது.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்