பூசணிக்காய் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

Report Print Printha in உணவு

பூசணிக்காயின் விதைகளில் விட்டமின் B, விட்டமின் A, மினரல்ஸ், தாது உப்புக்கள், கால்சியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், லினோனெலிக் அமிலம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

நமது உடம்பிற்கு ஆரோக்கியம் தரும் சத்துக்கள் அதிகமாக பூசணிக்காயில் இருப்பதால், நாம் இதை வாரம் இரண்டு முறைகள் அல்லது தினமும் உணவில் சேர்த்து வந்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது.

பூசணிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
  • பூசணிக்காயின் விதைகளில் ஸ்டெரைல் கிளைகோஸைட் மற்றும் கொழுப்பு அமிலம் இருப்பதால், இவை நமது உடம்பில் புற்று நோய் கட்டிகளை ஏற்படுத்தும் செல்களை அழித்து புற்று நோய் வராமல் பாதுகாக்கிறது.
  • பூசணி சாற்றுடன் ஒரு தேக்கரண்டி நெல்லி சாறு அல்லது எலுமிச்சை சாறு கலந்து தினமும் குடிப்பதால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் நம்மை தாக்குவதை தடுக்கிறது.
  • பூசணிக்காய்யை தினமும் நம் உணவில் சேர்த்து வந்தால், வயிற்றிலுள்ள நாடாப்புழுக்களை அழித்து, மூலப் பிரச்சனைகளுக்கு பூசணிக்காய் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
  • ஆயுர் வேதம் மருத்துவம் மற்றும் சித்த மருத்துவத்தில் வெண் பூசணிக்காயின் பூவை மஞ்சள் காமாலை, சீதபேதி மற்றும் இருமலைப் போக்கும் சிறந்த மருந்தாக பயன்படுத்துகின்றனர்.
  • பூசணிக்காய் சாப்பிடுவதால், நம் உடம்பில் உள்ள எலும்புகள் பலவீனமாவதை தடுக்கிறது. மேலும் இதில் இருக்கும் நார்ச் சத்துக்கள் சீரண உறுப்புகளுக்கு பலத்தை அதிகப்படுத்தி, மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.
  • வெண்பூசணிக் காயின் முற்றிய காய்கள் தலைவலி, நெஞ்சு சளி, மூச்சிரைப்பு ஆகியவற்றுக்கு சிறந்த மருந்தாக இருப்பதோடு, சிறுநீரக தொடர்பான நோய்களையும் தடுக்கிறது.
  • வெண்பூசணிக் கொடியின் தண்டில் இருக்கும் பீட்டா கரோட்டின் மற்றும் விட்டமின் சத்துக்கள் நமது உடம்பில், புதிய செல்களை உற்பத்தி செய்ய உதவுகிறது.
  • பூசணியில் பொட்டாசியம் சத்து மிகுதியாக இருப்பதால், நமது உடம்பின் அதிக ரத்த அழுத்தத்தை தடுத்து, இதயம் சம்பந்தப்பட்ட கோளாறுகள் வராமல் பாதுகாக்கிறது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments