முட்டையை பச்சையாக குடித்தால் என்ன நடக்கும்?

Report Print Printha in உணவு

பருவ வயது பெண்கள், வளரும் குழந்தைகள் முட்டையைப் பச்சையாக சாப்பிட்டால் உடல் வலுப்பெறும் என்று சொல்வதுண்டு.

ஏனெனில் முட்டையில் அதிகமான புரதச்சத்தும், குறைவான கார்போஹைட்ரேட்டும் உள்ளது.

மேலும் முட்டையின் வெள்ளைக் கருவில் 90 சதவீதம் தண்ணீர் மற்றும் 10 சதவீதம் புரதமும் தான் உள்ளது.

இதில் கொழுப்புச்சத்து இல்லை, ஆனால் மஞ்சள் கருவில் 100 சதவீதம் கொழுப்புச்சத்துக்கள் உள்ளது.

பச்சை முட்டை சாப்பிடுவது நல்லதா?
  • முட்டையை வேக வைக்காமல், பச்சையாகக் குடித்தால் உடலுக்கு அதிகச் சக்தி கிடைக்கும் என்று பலரும் கூறுவார்கள் இது தவறான கருத்தாகும்.
  • ஏனெனில் பச்சை முட்டையின் வெள்ளைக் கருவில் அவிடின் எனும் புரதச்சத்து உள்ளது. இது முட்டையில் உள்ள பயாட்டின் எனும் விட்டமினுடன் இணைந்து இருக்கும்.
  • முட்டையில் உள்ள இந்த பயாட்டின் சத்துக்கள் நமது உடலின் சிறுகுடலில் சத்துக்கள் உறிஞ்சப்படுவது தடுக்கப்படுகிறது. இதனால் நமது உடம்பிர்கு முட்டையின் முழுமையான சத்துக்கள் கிடைக்காமல் போகிறது.
  • நாம் முட்டையை வேகவைத்து சாப்பிட்டால், அந்த வெப்பத்தில் முட்டையில் இருக்கும் அவிடின் அழிந்துவிடுகிறது. இதனால் நமக்கு முட்டையில் உள்ள பயாட்டின் சத்துக்கள் முழுமையாக கிடைக்கிறது.
  • முட்டையின் வெள்ளைக் கருவில் இருக்கும் அவிடின் சத்தைவிட மஞ்சள் கருவில் இருக்கும் பயாட்டின் சத்து தான் நமக்கு முக்கியம். ஏனெனில் இந்த பயாட்டின் நமது கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்துகிறது.
  • முட்டையை பச்சையாக சாப்பிட்டால், அதில் உள்ள சால்மோனல்லா போன்ற பாக்டீரியா கிருமிகள் மூலம் நமக்கு டைபாய்டு, வயிற்றுப்போக்கு போன்ற நோய்தொற்றுகள் ஏற்படுகிறது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments