கல்லீரல், மூளை உறுப்புகளை சாப்பிடுவது நல்லதா?

Report Print Printha in உணவு

அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய கோழி, ஆடு, மாடு ஆகியவற்றின் இறைச்சியின் சதைப்பகுதியை விட அதனுடைய ஒவ்வொரு உறுப்புகளும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது.

கல்லீரல்

அசைவ உணவான கல்லீரலில் மல்டி விட்டமின் அடங்கியுள்ளது. இதை சாப்பிடுவதால், நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

சிறுநீரகம்

உயிரினங்களின் சிறுநீரகத்தை சாப்பிடுவதால், அது நமது உடம்பில் உள்ள நச்சுக்கள் மற்றும் கழிவுகளை அகற்ற உதவுகிறது.

மூளை

மூளையில் அதிக ஒமேகா3 அமினோ அமிலங்கள் மற்றும் இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளது. தாவரங்களில் இருப்பதை விட உறுப்பு இறைச்சிகளில் அதிகமாக இரும்புச் சத்துக்கள் உள்ளது.

இறைச்சி உறுப்புகளை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

  • இறைச்சியின் சதைப்பகுதியை விட உறுப்புக்களை சாப்பிடுவதால், வயிறு விரைவில் நிரம்பி விடுகிறது. அதோடு உடனே பசி எடுப்பது தடுக்கப்படுகிறது.

  • இறைச்சியின் உறுப்புகளில் அதிக கொலைன் இருப்பதால், அவை மூளைக்கு தேவையான சக்தியையும் வலுவையும் கொடுக்க உதவுகிறது.

  • இறைச்சி உறுப்புகள் சதைப்பகுதியை விட விலை மலிவானது. ஆனால் அது தசைகளின் வலிமையை அதிகரித்து, உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

குறிப்பு

கர்ப்பிணிகள் அசைவ உணவுகளை குறைவாக சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இவை அதிக யூரிக் அமிலத்தை உற்பத்தி செய்வதால், ஆர்த்ரைடிஸ் மூலம் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு வலியை ஏற்படுத்திவிடும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments