மனிதர்களை அடிமையாக்கும் உணவுகள்: எச்சரிக்கை தகவல்

Report Print Deepthi Deepthi in உணவு

உணவுகளை உட்கொள்ளும் நாம் சில நேரங்களில் நமக்கு பிடித்தமான உணவுகளுக்கு அடிமையாகிவிடுகிறோம் (Addiction).

ஆனால், நாம் எந்த உணவுக்கு அடிமையாகிவிடுகிறோமோ, அந்த உணவுகள் நம்முடைய செயல்பாடுகளை பாதிக்க வாய்ப்புள்ளது.

மிச்சிகன் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆராய்ச்சியில், மாணவர்களுக்கு அதிகம் பிடித்த உணவாக முதலில் சொக்லெட், இரண்டாவதாக ஐஸ்க்ரீம், பீட்சா போன்றவை இடம்பெற்றுள்ளன.

இவைகளை சாப்பிடுவது முக்கியமல்ல, ஆனால் இவற்றினை தொடர்ந்து சாப்பிட்டால் ஏற்படும் பிரச்சனைகளை தெரிந்துகொள்ளுங்கள்.

என்ன காரணம்?

மனிதனின் மகிழ்ச்சி மற்றும் புத்துணர்ச்சி போன்ற உணர்வுகளுக்கு காரணமான ஹார்மோன்களை சுரக்கச் செய்வதில் உணவின் பங்கு அதிகம்.

குறிப்பாக டோபமைன் (Dopamine) மற்றும் அட்ரினலைன் (Adrenaline) ஹார்மோன்கள் சுரப்புக்கு உணவு காரணமாகிறது. உதாரணமாக சொக்லெட், ஐஸ்க்ரீம், மைதா உணவுகளான பீட்சா, பர்கர் மற்றும் சோளமாவு, உருளைக்கிழங்கு, மது போன்றவற்றை உட்கொள்ளும் போது மகிழ்ச்சி உணர்வை ஏற்படுத்தும் டோபமைன் ஹார்மோன் சுரக்கிறது.

சிலர் காபி, டீ குடிக்கும்போதும் சிகரெட் பிடிக்கும்போதும் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு கிடைப்பது போல உணர்வார்கள். கஃபைன், புகையிலைப் பொருட்கள் ஆகியவையும் சுறுசுறுப்பு தரும் அட்ரினைல் ஹார்மோன் சுரப்புக்குக் காரணமாகின்றன.

அதாவது, ஒரு வேலையை செய்துகொண்டிருக்கும்போது, உங்களுக்கு சலீப்பு ஏற்படுகிறது, எனவே சுறுசுறுப்பை தரும் உணவுகளை உட்கொள்ளும் நீங்கள், நாளடைவில் உங்களை அறியாமலேயே அந்த உணவுகளுக்கு அடிமையாகி விடுகிறீர்கள்.

சில வருடங்கள் இந்தப் பழக்கத்தை தொடரும்போது மூளையின் நரம்பு மண்டலத்தை தாக்கி உங்கள் செயல்களை முடக்கிவிடுகிறது. கட்டுப்பாட்டை இழக்கும் மூளை சுயநினைவை இழக்கிறது.

பதற்றம், விரக்தி போன்ற விபரீத செயல்பாடுகளுக்கும் தூண்டப்படுகிறீர்கள் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள்.

மொத்தத்தில், நீங்கள் எந்த உணவினை எடுத்துக்கொண்டாலும், அதனை அளவோடு எடுத்துக்கொள்ளுங்கள், உங்களுக்கு உற்சாகம் வேண்டும் என்பதற்காக நீங்கள் அதனை அடிக்கடி எடுத்துக்கொண்டால், அது உங்களுக்கு ஒருவித போதையை தருகிறது என்றே அர்த்தம்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments