தண்டுக்கீரையை இப்படி சாப்பிட்டால் கொழுப்பைக் குறைக்கலாம்..

Report Print Printha in உணவு

அன்றாட உணவில் கீரை வகைகளை சேர்த்துக் கொள்வதால், நம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

அதிலும் அதிக சத்துக்களை கொண்ட தண்டுக்கீரையை சில உணவுப் பொருட்களுடன் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால், ஏராளமான நன்மைகளை பெறலாம்.

தண்டுக்கீரையை எப்படி சாப்பிடலாம்?
  • தண்டுக்கீரையுடன் உளுந்து, மஞ்சள் ஆகிய இரண்டையும் சேர்த்து கஷாயம் செய்து, சாப்பிட்டு வந்தால், நரம்புக் கோளாறு பிரச்சனைகள் குணமாகும்.
  • தண்டுக்கீரையுடன் மிளகு மற்றும் மஞ்சளை சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்டக் கொழுப்புகள் குறையும்.
  • சிறுபருப்பு மற்றும் பூண்டு ஆகிய இரண்டையும் தண்டுக்கீரையுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால், உடல் எரிச்சல் சரியாகும்.
  • தண்டுக்கீரையுடன் நெல்லிக்காய் சாறு சேர்த்து அரைத்து, அதற்கு சமமாக தேன் கலந்து காய்ச்சி, அதில் தினமும் 2 ஸ்பூன் சாப்பிட்டு வந்தால், கண் தொடர்பான நோய்கள் குணமாகும்.
  • சீரகம், மஞ்சள் மற்றும் பார்லி ஆகியவற்றை சேர்த்து தண்டுக்கீரையுடன் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால், சீதபேதி, நீர் கடுப்பு, எரிச்சல் போன்ற பிரச்சனைகள் தடுக்கப்படும்.
  • தண்டுக்கீரை, துத்தி இலை மற்றும் சீரகம் ஆகிய மூன்றையும் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால், மூலம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்