இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்கள்

Report Print Printha in உணவு

மனிதனின் வளர்ச்சி, வளர்சிதை மாற்றம், உணர்வுகள், பாலியல் இயக்கம், இனப்பெருக்கச் செயல்பாடு போன்றவற்றை இயக்குவது ஹார்மோன்கள். அத்தகைய ஹார்மோன்களை சீராக்க உதவும் உணவுகள் இதோ,

தேங்காய்

தேங்காயை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் ஹார்மோன்களின் இயக்கம் மற்றும் தைராய்டு இயக்கத்தை சீராக்கி உடல் எடையை சீராக பராமரிக்க உதவுகிறது.

எனவே தேங்காய்ப்பால், தேங்காய் சட்னி, தேங்காய் எண்ணெய் இது போன்று ஏதாவது ஒரு வகையில் தேங்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கிரீன் டீ

தினமும் காபிக்கு பதிலாக மூலிகை டீ, கிரீன் டீ போன்றவற்றை ஒரு நாளைக்கு இரண்டு கப் என்ற அளவில் குடிக்கலாம்.

கேரட்

கேரட்டில் உள்ள நார்ச்சத்து, ஈஸ்ட்ரோஜன் அளவை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. எனவே தினமும் பிஞ்சு கேரட்களை பச்சையாகச் சாப்பிட்டு வரலாம்.

துத்தநாகம் சத்துள்ள உணவுகள்

துத்தநாகம் சத்துக்கள் டெஸ்டோஸ்டிரான் எனும் ஹார்மோன் சுரக்கவும், செல்கள் பிரிவதற்கும் உதவுகிறது.

எனவே நம் உடலுக்கு போதுமான துத்தநாகச் சத்தை கொடுக்கும் கடல் உணவுகள், இறைச்சி, நிலக்கடலை, சுண்டல், டார்க் சாக்லெட் போன்றவற்றை சாப்பிடலாம்.

நார்ச்சத்து நிறைந்த உணவுகள்

நார்ச்சத்துக்கள் டெஸ்டோஸ்டிரான், ஈஸ்ட்ரோஜன், ப்ரோஜெஸ்டிரான் ஆகிய ஹார்மோன்களை சமநிலையில் வைக்க உதவுகிறது.

எனவே நார்ச்சத்து மிகுந்த முழுத் தானியங்கள், பச்சை நிறக் காய்கறிகள், வாழைப்பழம், ஆரஞ்சு, ஆப்பிள், அத்திப்பழம் ஆகியவற்றை சாப்பிடலாம்.

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ள உணவுகள்

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகள் ஹார்மோன்களின் இயக்கத்துக்கு உதவுவதால், அந்த சத்துக்களை கொண்ட வால்நட், முட்டை, மீன், ஃப்ளாக்ஸ் விதைகள் ஆகியவறைச் சாப்பிடலாம்.

மக்னீசியம் சத்துள்ள உணவுகள்

மக்னீசியம் சத்துக்கள் நீண்ட நேர ஆரோக்கியமான தூக்கத்தை அளித்து, நம் உடலுக்கு சக்தி அளித்து, ஹார்மோன்களை இயக்க வைக்க உதவுகிறது.

எனவே மக்னீசியம் நிறைந்த கீரைகள், நட்ஸ், விதைகள், மீன், வாழை, உலர்பழங்கள் ஆகியவற்றை சாப்பிடலாம்.

உடற்பயிற்சி

தினமும் நீச்சல், சைக்கிளிங், வாக்கிங், கார்டியோ, ஜாகிங் போன்ற உடற்பயிற்சிகளை பின்பற்றி வந்தால், இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், மன அழுத்தம், சோர்வு போன்ற பிரச்சனைகளை தடுக்கலாம்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers