நாட்டுக்கோழி பற்றிய சில தகவல்கள்

Report Print Deepthi Deepthi in உணவு

நாட்டுக்கோழியில் கொழுப்பை விட புரதச்சத்து அதிக அளவில் இருக்கிறது.

பிராய்லர் கோழியோ, முட்டையில் குஞ்சாகி வெளியே வந்த 45 நாட்களுக்குள் இறைச்சிக்காக அழிக்கப்படுகிறது.

200 நாட்கள் சேர்ந்து வளர வேண்டியதை பிராய்லர் 45 நாட்களில் வளர்ந்துவிடுகிறது, அதுவும் ஹார்மோன் ஊசிகள் போட்டு வளர்க்கப்படுகிறது.

பிராய்லர் கோழிகள் சூரிய ஒளியே படாத கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் கால்சியம் கிடைக்கப் பெறுவதில்லை.

ஓடியாடாமல் ஒரே இடத்தில் நிலை கொண்டிருப்பதால் புரதத்தை விட பிராய்லரில் கொழுப்புச் சத்து அதிகரிக்கிறது.

100 கிராம் நாட்டுக்கோழியில் 4 கிராம் கொழுப்புதான் இருக்கிறது, அதுவே 100 கிராம் பிராய்லரில் 23 கிராம் கொழுப்பு இருக்கிறது.

100 கிராம் பிராய்லரில் 16 கிராம் புரதம்தான் இருக்கிறது, அதுவே நாட்டுக்கோழியில் 21 கிராம் புரதம் இருக்கிறது.

கொழுப்பு குறைவாகவும் புரதம் அதிகமாகவும் இருக்கும் உணவே சிறந்தது. அந்த அடிப்படையிலும் நாட்டுக்கோழிதான் சிறந்தது.

பிராய்லர் கோழிகளுக்கு உடல் மற்றும் மன நலப் பிரச்னைகள் அதிக அளவில் ஏற்படுகின்றன. Sudden Death Syndrome எனப்படும் திடீர்ச்சாவு பிராய்லர் கோழிகளுக்கு ஏற்படுகிறது.

நாட்டுக்கோழிகளுக்கு Dexa Hexanoic Acid எனப்படும் ரசாயனம் அதிகளவில் சுரப்பதால் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும். பிராய்லர் கோழிகளில் இந்த ரசாயனத்தின் அளவு குறைவாக இருப்பதால் மூளை வளர்ச்சி இருக்காது.

மூளை வளர்ச்சியில்லாத, உடல் வலுவில்லாத பிராய்லர் கோழிகளை சாப்பிடுவதன் மூலம் கொழுப்பைத் தவிர்த்து நமக்கு வேறு எதுவும் கிடைக்கப்பபோவதில்லை.

பிராய்லர் கோழிகளின் எலும்பு அவ்வளவு வலுவாக இருக்காது, அதன் சதைப் பகுதியும் நீர்கோத்து மென்மையாக, சாப்பிட எளிதாக இருக்கும்.

நாட்டுக்கோழியின் இறைச்சி கடினமாக இருக்கும். கோழி இறைச்சியை நன்றாக மென்று தின்னால்தான் சிலருக்குத் திருப்தியாக இருக்கும்.

அதற்கு நாட்டுக்கோழிதான் ஏற்றது. நாட்டுக்கோழி இறைச்சியில் இயற்கையான குணமும் மணமும் கூடுதலாக இருப்பதன் காரணமாகவே, பலருக்கும் அது மட்டுமே பிடிக்கிறது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers