இந்த உணவுகளை சாப்பிடுங்கள்: இனிமேல் பல்வலியே வராது

Report Print Printha in உணவு

பல்வலி, ஈறுக்களில் பாதிப்பு, வாய் துர்நாற்றம் போன்ற பற்கள் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் தடுக்க பற்களுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிட்டாலே போதும்.

முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி, காலிப்ளவர் போன்ற அதிக ஃபைபர் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால், பற்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பேட் கிடைக்கும். அதனால் பற்கள் தொடர்பான பிரச்சனைகள் வராது.

சீஸ்

பற்களுக்கு தேவையான மினரல்ஸ் மற்றும் கால்சியம் சத்துக்கள் சீஸ்ஸில் இருந்து கிடைக்கிறது. அதோடு பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களையும் சாப்பிடலாம். இதனால் பற்களின் வெள்ளை நிறம் மாறாது.

பழங்கள்

விட்டமின் C பற்கள் மற்றும் எலும்புகளுக்கு மிகவும் நல்லது. எனவே விட்டமின் C நிறைந்த ஆரஞ்சு, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, கிவி, கேரட் போன்றவற்றை அடிக்கடி சாலட் அல்லது ஜூஸ் செய்து சாப்பிடலாம்.

ப்ளாக் டீ

ப்ளாக் டீ பற்களுக்கு மிகவும் நல்லது, ஏனெனில் ப்ளாக் டீயில் உள்ள பாலிஃபினால்ஸ், பற்களில் உள்ள பாக்டீரியாவை கொன்று பற்களில் பாதிப்புகளை உண்டாக்கும் அமில சுரப்பை தடுக்கிறது.

அசைவம்

ஆட்டுக்கறி, மீன் போன்ற அசைவ உணவில் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. எனவே இவை பற்களின் எனாமலை பாதுகாத்து, பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

நட்ஸ்

பற்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் மற்றும் மினரல்ஸ் சத்துக்கள் நட்ஸ்களில் அதிகமாக உள்ளது. எனவே வேர்க்கடலை, பாதாம், முந்திரி, வால்நட்ஸ் போன்றவற்றை அடிக்கடி சாப்பிட வேண்டும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்