மாரடைப்பை ஏற்படுத்தும் உணவுகள்: இனிமேல் சாப்பிடாதீர்கள்

Report Print Printha in உணவு
2230Shares
2230Shares
lankasrimarket.com

அன்றாடம் நாம் சாப்பிடும் ஒருசில உணவுகள் இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி, மாரடைப்பை உண்டாக்கும். அந்த உணவுகள் இதோ,

சீஸ் மற்றும் வறுத்த உணவுகள்

சீஸ் அதிகம் பயன்படுத்தும் உணவுகள் மற்றும் எண்ணெயில் வறுத்த உணவுகளை அதிகமாக சாப்பிடக் கூடாது. ஏனெனில் அந்த உணவில் உள்ள கெட்ட கொழுப்புக்கள், ரத்தத்தில் கொலஸ்ட்ராலை அதிகரித்து, இதய நோய்கள் மற்றும் மாரடைப்பை ஏற்படுத்தும்.

ஆல்கஹால்

ஆல்கஹாலில் ஒன்றான ரெட் ஒயினை அதிகமாக சாப்பிட்டால், அது இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி ரத்த அழுத்தம், மாரடைப்பு பிரச்சனையை உண்டாக்கும்.

சைனீஸ் உணவுகள்

சைனீஸ் உணவுகளில் அதிகமான அளவில் இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் சேர்க்கப்படுகிறது. அதிலும் அந்த உணவுகளில் சேர்க்கப்படும் அஜினோமோட்டோ மற்றும் சோயா சாஸ் எனும் பொருட்கள் இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி, இதய நோயை உண்டாக்கும்.

கிளிசரின் உணவுகள்

கார்ன் ப்ளேக்ஸ் மற்றும் வெள்ளை பிரட்களில் அளவுக்கு அதிகமான அளவில் கிளிசரின் கார்போஹைட்ரேட் உள்ளது. இந்த உணவுகளை சாப்பிட்டால், அது இதயத்தின் ஆரோக்கியத்தை பாதித்து மாரடைப்பை உண்டாக்கும்.

சர்க்கரை

சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அவை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரித்து, நீரிழிவு மற்றும் மாரடைப்பினை ஏற்படுத்தும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்