மலச்சிக்கலை போக்கும் கீரை: எப்படி சாப்பிட வேண்டும்?

Report Print Printha in உணவு
686Shares
686Shares
Promotion

உணவு மற்றும் மருத்துவ மூலிகைகளில் பயன்படும் கரிசலாங்கண்ணி கீரையில் மஞ்சள் மற்றும் வெள்ளை என்று இரு வகைகள் உண்டு.

இந்த கரிசலாங்கண்ணி கீரையில் நீர்ச்சத்து, மாவுச்சத்து, புரதம், கொழுப்புச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் ஆகியவை ஏராளமாக நிறைந்துள்ளது.

கரிசலாங்கண்ணி கீரையின் நன்மைகள்
 • கரிசலாங்கண்ணி கீரையுடன் பருப்பு சேர்த்துக் கடைந்து நெய் சேர்த்து, சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும்.
 • தினமும் உணவில் கரிசலாங்கண்ணி கீரையை சேர்த்துக் கொண்டால், அது ரத்தத்தை சுத்தமாக்கி, கண் பார்வையை கூர்மையாக்கும்.
 • கல்லீரல், மண்ணீரலில் ஏற்படும் வீக்கத்தை போக்கி, தோல் தொடர்பான அனைத்து நோய்களுக்கும் நல்ல நிவாரணம் தர உதவுகிறது.
 • கரிசலாங்கண்ணி கீரையை உண்பதாலும், அதன் சாற்றை தலையில் தேய்ப்பதாலும், முடியின் வளர்ச்சி மற்றும் கருமை நிறம் அதிகமாகிறது.
 • உடல் பருமன் மற்றும் தொப்பையினால் அவதிப்படுபவர்கள் இந்த கரிசலாங்கண்ணி கீரையை, தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலனைக் காணலாம்.
 • ரத்தச்சோகை, மஞ்சள் காமாலை போன்ற நோய்களை கட்டுப்படுத்த இந்த கரிசலாங்கண்ணி கீரை பெரிதும் உதவுகிறது.
 • தொடர்ச்சியான இருமலை போக்க கரிசலங்கண்ணி கீரையின் சாறு எடுத்து நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி, வடிகட்டி ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட வேண்டும்.
 • கரிசலாங்கண்ணி சூரணத்துடன் திப்பிலிச் சூரணம் சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா குறையும்.
 • கரிசலாங்கண்ணி சாற்றை தினமும் காலையில் 30 மி.லி அளவு சாப்பிட்டு வந்தால், சிறுநீர் எரிச்சல் குணமாகும்.
 • கரிசலாங்கண்ணி கீரையை காய வைத்து பொடி செய்து தினம் 5 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல நிறம் பெறும்.
 • தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய்யில், தேவையான அளவு கரிசலாங்கண்ணி சாறு கலந்து காய்ச்சி வடிகட்டி, தலையில் தேய்த்து வர தலைமுடி நன்றாக வளரும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்