இந்த உணவுகளை அதிகமாக சாப்பிடலாம்: எடை அதிகரிக்காதாம்

Report Print Printha in உணவு

சில உணவுப் பொருட்களை நாம் எவ்வளவு சாப்பிட்டாலும் அது நம் உடல் எடையினை அதிகரிப்பதில்லை.

அத்தகைய உணவுகளை எப்போது வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதோ அவைகள்,

காலிஃப்ளவர்

ஒரு கப் காலிஃப்ளவரில் 28-52 அளவு கலோரிகளே உள்ளது. இதை உட்கொள்வதால் உடலில் அதிக அளவில் கொழுப்பு சேர்வதில்லை. இதனால் உடல் எடையும் எளிதில் குறையும்.

காலிஃப்ளவரில் உள்ள பொட்டாசியம் சத்து, உடலின் செயல்பாடுகளை சீராக்கி, செரிமானப் பிரச்சனை வராமல் தடுக்கிறது.

பீட்ரூட்

பீட்ரூட்டில் விட்டமின் C, பொட்டாசியம், ஃபோலாசின், பீட்டா கரோட்டின், மாவுச்சத்து, இரும்புச்சத்து போன்றவை அதிகம் உள்ளது.

அதுவும் இந்த பீட்ரூட்டில் கொழுப்புச்சத்து இல்லை. எனவே இதை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

பூசணிக்காய்

பூசணிக்காயின் விதைகளில் விட்டமின் A, B, மினரல்ஸ், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், சிங்க், பிடோசின்ஸ், லினோனெலிக் அமிலம் ஆகியவை அடங்கியுள்ளது.

இதில் கலோரி மிகவும் குறைவாக இருப்பதால் உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக சாப்பிடலாம்.

பாப்கார்ன்

சோளத்தால் தயாரிக்கப்படுவது பாப்கார்ன். சோளத்தில் B காப்ளெக்ஸ் விட்டமின் E ஆகியவை நிறைந்துள்ளது. எனவே இது செரிமானத்தை எளிதாக்கி, மலச்சிக்கலைத் தடுக்கும்.

பாப்கார்னில் உள்ள நார்ச்சத்து ரத்தத்தில் சேரும் கொலஸ்ட்ராலின் அளவை மற்றும் பசி உணர்வைக் குறைத்து, உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கிறது.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி பழத்தில் விட்டமின் A, K, C, தையமின், ரிபோபேளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம் போன்றவை உள்ளது.

இப்பழத்தை அதிகமாக சாப்பிட்டால் ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரித்து, செல் அழிவை தடுத்து. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து மாரடைப்பு வராமல் தடுக்க உதவுகிறது.

ஆப்பிள்

ஆப்பிள் பழத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, குளோரோபில், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், பாஸ்பரஸ் மற்றும் பல ஆர்கானிக் அமிலங்கள் உள்ளது.

இவை செரிமானப் பாதையில் ஏற்படும் என்சைம்கள் குறைபாட்டை சரிசெய்து, பலவிதமான வயிற்றுக் கோளாறுகள் மற்றும் உடலில் கெட்ட கொழுப்புகள் சேராமல் தடுக்கிறது.

முட்டை

முட்டையின் வெள்ளை கருவில் புரதச்சத்து அதிகமாக உள்ளது. அதனால் முட்டையின் மஞ்சள் கருவை நீக்கி விட்டு, வெள்ளை கருவை மட்டும் உட்கொண்டால், புரதச்சத்தை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கி, உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயில் தாதுப் பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், மற்றும் குளோரின் ஆகியவை உண்டு.

இவை ரத்ததில் சிவப்பணுக்களை அதிகமாக உற்பத்தி செய்து, வயிற்றிலுள்ள கொழுப்பைக் கரைத்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது.

தக்காளி

தக்காளியை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அது நம் உடலை வறட்சி அடையாமல் தடுத்து, உடலில் உள்ள கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி உடல் எடை அதிகரிக்காமல் தடுக்க உதவுகிறது.

ஆரஞ்சுப் பழம்

ஆரஞ்சுப் பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே அவை நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து, கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைக்க உதவுகிறது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்