இந்த உணவுகளில் இப்படி ஒரு ஆபத்து உள்ளதா?

Report Print Printha in உணவு

அனைத்து உணவுகளும் ஆரோக்கியமானதாக இருந்தாலும் அவை ஒவ்வொருவரின் உடலில் அமைப்பைப் பொறுத்து நன்மை மற்றும் தீமை உண்டாகும்.

அதிக சத்துக்கள் உள்ள சில உணவுகள் கூட நம் உடலுக்கு சில பாதிப்பை ஏற்படுத்தும். ஏனெனில் அதற்கு அமிலத்தன்மை ஒரு காரணமாகும். அந்த அமிலத்தன்மை நிறைந்த உணவுகள் இதோ,

பால்

பால், சீஸ், யோகார்ட், ஐஸ் க்ரீம் போன்ற பால் உணவுப் பொருட்கள் அனைத்துமே அமிலத்தன்மை நிறைந்தது. எனவே இவற்றை அதிகம் சாப்பிடுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.

மீன்

மீன் வகைகளில் பன்ன மீன், கெலக்க மீன் மற்றும் சாலமன் ஆகிய மீன்கள் சாப்பிடுவதால் அது நம் உடலில் அதிக அமிலத் தன்மையை உண்டாக்கும்.

இறைச்சி

இறைச்சிகளில் குறிப்பாக மாட்டிறைச்சி, பன்றியிறைச்சி, சிக்கன், டர்க்கி வகை பறவை இறைச்சி போன்றவை அதிக அமிலம் உண்டாக்குபவை. அதனால் இவை உடலில் அதிகம் அசிடிட்டி பிரச்சனையை உண்டாகும்.

நட்ஸ்

வேர்க்கடலை, பட்டாணி, மற்றும் வால்நட்ஸ் போன்ற அனைத்து நட்ஸ் வகைகளும் அதிக அமிலத்தன்மையை உண்டாக்கும். எனவே இவற்றை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது.

பயிறு வகைகள்

பயிறுகளில் உள்ள அனைத்து வகையும் அசிடிட்டி பிரச்சனையை உருவாக்கும். எனவே இவற்றை தினமும் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

தானியங்கள்

கோதுமை, பதப்படுத்தப்பட்ட சோளம், ராகி போன்றவை அமிலத்தன்மை உருவாக்குபவை. எனவே இவற்றை அசிடிட்டி பாதிப்பு இருப்பவர்கள் குறைவாக சாப்பிடுவது நல்லது.

புதினா

புதினா அதிக அமிலத்தன்மையை உண்டாக்குபவை. எனவே அசிடிட்டி அல்லது நெஞ்செரிச்சல் பிரச்சனை உள்ளவர்கள் இந்த புதினா ஜூஸ் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

தக்காளி

தக்காளி பழத்தில் உள்ள லைகோபின் நம் வயிற்று அமிலத்தை அதிகம் சுரக்கச் செய்து அமிலத்தன்மையை அதிகமாக்கிவிடும்.

ஆரஞ்சு

ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்கள் அதிக அமிலத்தை உற்பத்தி செய்பவை. எனவே இவற்றை அதிகம் சாப்பிட்டால் நெஞ்செரிச்சலை உண்டாக்கும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்