இந்த உணவுகளால் உயிரே போகும் அபாயம் உள்ளது! எச்சரிக்கை தகவல்

Report Print Printha in உணவு
1852Shares
1852Shares
ibctamil.com

உணவு பொருட்கள் சுவையானதாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கலாம். ஆனால் அதில் சில உணவுகள் நம் உடல் ஆரோக்கியம் முழுவதையும் பாதித்து உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும்.

அந்த வகையில் இருக்கும் உணவுகள் எவை என்பதை தெரிந்துக் கொள்வோம்.

காளான்

காளான் வகைகளில் பல உண்டு, ஆனால் அவை அனைத்துமே ஒரே மாதிரியானவை அல்ல, சில வகையான காளான்களில் ஆளைக்கொல்லும் விஷம் இருக்கும், எனவே காளான் வாங்கும் போது பார்த்து வாங்குவது மிகவும் நல்லது.

தக்காளி

தக்காளியின் இலைகளில் உள்ள க்ளைகோலாய்டு, வயிற்று பிடிப்புகள், வயிற்று உப்புசம் மற்றும் பதட்டம் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளை உண்டாக்கும், எனவே தக்காளி இலைகளை உணவில் சேர்க்கக் கூடாது.

வேர்க்கடலை

வேர்க்கடலை சிலருக்கு அழற்சியை ஏற்படுத்தும், அப்படி அழற்சி இருக்கும் போது வேர்க்கடலையை சாப்பிட்டால், அது மூச்சு விடுவதில் சிரமம், அதிர்ச்சி, சுயநினைவை இழக்கும் நிலை மற்றும் இறப்பைக் கூட ஏற்படுத்தும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கின் தண்டு மற்றும் இலைகள் ஆகிய இரண்டுமே அதிக விஷம் நிறைந்தது, அதோடு பச்சை நிற உருளைக்கிழங்கை உட்கொண்டால், அதனால் இறப்பு கூட நேரலாம்.

செர்ரி

செர்ரி பழங்களின் விதைகளில் விஷமிக்க ஹைட்ரஜென் சையனைடு உள்ளது, எனவே செர்ரி பழங்கள் சாப்பிடும் போது கவனமாக உட்கொள்வது நல்லது.

இறைச்சி மற்றும் முட்டை

முட்டை மற்றும் இறைச்சிகளை நன்றாக வேக வைக்காமல் சாப்பிட்டால், அதில் உள்ள சால்மோனெல்லா பாக்டீரியா, நம் உடலில் உள்ள இரைப்பையை பாதிப்பதோடு, ரத்த குழாய்களில் நுழைந்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை தாக்கி அது உயிரையே பறித்துவிடும்.

பாதாம்

பாதாம் கசப்பாக இருந்தால், அதை தூக்கிப் போடக் கூடாது, ஏனெனில் அந்த வகை பாதாமில் உயிரைப் பறிக்கும் சையனைடு உள்ளது. ஆகவே பாதாமை முடிந்த அளவு லேசாக வறுத்து சாப்பிடுவது நல்லது.

விளக்கெண்ணெய்

ஆமணக்கு செடியின் கொட்டையில் இருந்து கிடைக்கும் விளக்கெண்ணெயில் ரிசின் எனும் விஷம் இருக்கலாம். எனவே அதன் தயாரிப்பு வழிமுறைகளை தெரிந்த பின் பயன்படுத்துவது நல்லது.

மீன்

பஃபெர் மீனின் தோல் மற்றும் அதன் குறிப்பிட்ட உறுப்புக்களில் கடுமையான விஷம் உள்ளது. அதேபோல் டூனா மீனில் தீங்கு விளைவிக்கும் பாதரசம் உள்ளது. எனவே இதை சாப்பிட்டால், அது மரணத்தை கூட ஏற்படுத்தலாம்.

தேன்

தேன் மருத்துவ குணம் நிறைந்த ஒன்றாக இருந்தாலும், அதில் உள்ள பைரோலிஜிடைன் அல்கலாய்டுகள் எனும் டாக்ஸின்கள் உள்ளது. இது தேனை சரியாக பதப்படுத்தாத போது, அது தலைவலி, தலைச்சுற்றல், பலவீனம், வாந்தி போன்றவற்றை ஏற்படுத்தும்.

பீன்ஸ்

கிட்னி பீன்ஸை சரியாக சமைக்கவில்லை எனில், அதில் உள்ள லெக்டின் வயிற்றில் உள்ள செல்களை அழிப்பதோடு, உடலின் ஆரோக்கியத்தை பாதிக்கும். எனவே கிட்னி பீன்ஸை பல மணிநேரம் நீரில் ஊற வைத்து, சாப்பிட வேண்டும்.

ஜாதிக்காய்

ஜாதிக்காயை அளவுக்கு அதிகமாக சேர்த்துக் கொண்டால், அது மனச்சோர்வு, மாயத்தோற்றம் மற்றும் உயர்ந்த உற்சாகம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்