உடல் எடை குறைக்கும் உணவுகள்: வெறும் வயிற்றில் சாப்பிட்டால் பலன்

Report Print Printha in உணவு
496Shares
496Shares
ibctamil.com

உடல் எடையை குறைப்பதற்கு ஜிம் பயிற்சியோ அல்லது கடுமையான டயட் இருப்பதோ தேவையில்லை. அதற்கு பதிலாக சில உணவுகளை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வதன் மூலம் விரைவில் நல்ல பலனைக் காணலாம்.

பப்பாளி

பப்பாளியில் உள்ள பபைன் என்னும் கூறு எடை குறைப்பிற்கு பெரிதும் உதவுகிறது. இப்பழத்தில் உள்ள நார்ச்சத்து விரைவில் வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கிறது.

அதனால் பப்பாளி பழத்தை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடல் எடை விரைவில் குறையும்.

ஓட்ஸ் நீர்

ஓட்ஸை திட உணவாக எடுத்துக் கொள்வதற்கு பதிலாக, ஓட்ஸுடன் அதிக அளவு நீர் சேர்த்து திரவ உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

அதுவும் இந்த உணவை தினமும் காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வதன் மூலம் எடையை விரைவில் குறைக்கலாம்.

காய்கறி ஜூஸ்

இஞ்சி, வெள்ளரிக்காய், கேரட், ப்ரோகோலி, பீட்ரூட், ஆப்பிள், செலெரி தக்காளி, பாகற்காய் போன்று ஏதாவது ஒன்றை ஜூஸ் செய்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

மரகோதுமை

மரகோதுமை, கோதுமை அல்லது அரிசிக்கு மாற்றாக பயன்படுதும் ஒரு உணவு பொருள். இது குறைந்த கலோரி மற்றும் கொழுப்பு உள்ள தானியம்.

எனவே இதை காலையில் வெறும் வயிற்றில் தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை விரைவில் குறையும்.

முட்டை

முட்டை என்பது அதிக புரத அளவு கொண்ட உணவு. இந்த முட்டையை காலை உணவாக சாப்பிடுவதால் வயிறு நிரம்பிய உணர்வு கிடைக்கும். ஆனால் தினமும் 2 மஞ்சள் கருவிற்கு அதிகமாக எடுத்து கொள்ள கூடாது.

சோள உணவு கஞ்சி

சோள கஞ்சி உடல் எடை குறைக்க பெரிதும் உதவுகிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் சோள கஞ்சி வைத்து பருகி வந்தால், அது உடல் எடையை விரைவில் குறைக்கும்.

தானிய ப்ரெட்

முழு தானிய ப்ரெட் குறைந்த கொழுப்பு அடங்கிய தானியங்கள் கொண்டு தயாரிக்கப்பட்டது. இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. எனவே இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில், சாப்பிட்டு வர வயிறு எளிதில் நிரம்பும்.

கருப்பு திராட்சை

கருந்திராட்சையில் அதிகளவு ஆன்டி-ஆக்ஸ்சிடென்டுகள் மற்றும் மினரல்கள் உள்ளது. எனவே இந்த கருப்பு திராட்சையை காலை உணவாக வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால் உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்