இதில் எல்லாம் ஆல்கஹால் கலந்துள்ளது: விஷமாக மாறும் தன்மை கொண்டதாம்

Report Print Printha in உணவு
376Shares
376Shares
ibctamil.com

அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் சாப்பிடும் சில உணவுப் பொருட்களில் ஆல்கஹால் கலந்துள்ளது. அந்த உணவுகள் எவை என்பதை பார்க்கலாம்.

வெண்ணிலா சாறு

ஐஸ்க்ரீம்களில் ஒருசில துளி வெண்ணிலா சாறு மட்டும் ஏன் சேர்க்கப்படுகிறது. ஏனெனில் சில வகை வெண்ணிலா சாறுகளில் வோட்கா, ஜின் போன்ற மது பானங்களில் இருக்கும் அளவு ஆல்கஹால் அளவு உள்ளது.

கை கழுவும் திரவம்

Hand Sanitizer எனப்படும் கை கழுவும் திரவத்தில் ஆல்கஹால் கலப்பு உள்ளது. சோப்பை விட அதிக வேகமாக நச்சு நுண்ணுயிர்களை இது கொல்வதற்கு காரணம் இதில் உள்ள ஆல்கஹால் கலப்பு.

ஆனால் ஆல்கஹால் சேர்க்காத கை கழுவும் திரவத்தில் நுண்ணுயிர்களை கொல்லும் திறன் குறைவாக தான் இருக்கும்.

இருமல் மருந்து

நாம் உட்கொள்ளும் பெரும்பாலான இருமல் மருந்தில் 10 - 40% அளவில் ஆல்கஹால் சேர்க்கப்படுகிறது. எனவே இருமல் மருந்தினை மருத்துவரின் பரிந்துரைப்படி எடுத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

மௌத் வாஷ்

வாயை கொப்பளிக்க பயன்படுத்தும் மௌத் வாஷில் அதிகப்படியான அளவு ஆல்கஹால் கலப்பு உள்ளது. இதில் 30% வரையிலும் ஆல்கஹால் சேர்க்கப்படுகிறது.

வாசனை திரவியம்

உடல் முழுதும் நறுமணத்தை உண்டாக்க நாம் தினமும் பயன்படுத்தும் வாசனை திரவியத்திலும் கூட ஆல்கஹால் கலப்பு இருக்கிறது.

இதில் 50-90% ஆல்கஹால் கலப்பு இருக்கிறது. இதில் சேர்ந்திருக்கும் ரசாயனக் கலப்பு குடித்தால் விஷமாக மாறும் அளவு தன்மை கொண்டது.

கண்ணாடி துடைப்பான்

கார் கண்ணாடியை துடைக்க பயன்படுத்தும் வைப்பர்களை துடைக்க உதவும் திரவத்திலும் கூட ஆல்கஹால் கலப்பு சேர்க்கப்படுகிறது. ஆனால் இது மிகவும் விஷத்தன்மை வாய்ந்ததாகும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்