ரத்த அழுத்தக் குறைவு பிரச்சனையா? இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்கள்

Report Print Printha in உணவு

ரத்தம் இதயத்திற்கு வரும் போது ஒரு குறிப்பிட்ட வேகத்திலும், இதயத்தில் இருந்து வெளியேறும் போது வேறு ஒரு வேகத்திலும் செல்லும் போது ரத்த அழுத்தப் பிரச்சனை ஏற்படுகிறது.

யாருக்கெல்லாம் ரத்த அழுத்த பிரச்சனை வரும்?

தடகள வீரர்கள், கடுமையாக உடற்பயிற்சி மற்ரும் ஜிம் பயிற்சி செய்பவர்கள், ஒல்லியான உடல்வாகு உள்ளவர்கள், கர்ப்பிணிகள், தைராய்டு உள்ளவர்கள், வயதானவர்கள், படுக்கையில் நீண்ட காலம் படுத்திருப்பவர்கள் ஆகியோருக்கு ரத்த அழுத்தம் குறைவு பிரச்சனை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இந்த ரத்த அழுத்த குறைவு பிரச்சனை உள்ளவர்கள் சில உணவு முறைகளை பின்பற்றுவதன் மூலம் சரிசெய்யலாம். அவைகள்,

பட்டாணி

பட்டாணியில் புரோட்டீன், விட்டமின்கள் மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவை உள்ளது. இது ரத்த அழுத்தத்தை அதிகரிக்க உதவுகிறது. ஆனால் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் பட்டாணியை விட பச்சை பட்டாணியை உரித்து சமைத்து சாப்பிடுவது நல்லது.

உருளைக்கிழங்கு

நம் உடலில் உள்ள ஸ்டார்ச் குறைவதால் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. அதற்கு ஸ்டார்ச் அதிகமாக உள்ள உருளைக்கிழங்கை அவ்வப்போது எடுத்துக் கொண்டால் குறைந்த ரத்த அழுத்தம் பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்.

பப்பாளி

குறைந்த ரத்த அழுத்தத்தை சரிசெய்ய விட்டமின் C உணவுகள் உதவுகிறது. எனவே பப்பாளிப் பழத்தினை எடுத்துக் கொள்ளலாம். இந்த பப்பாளியில் அதிகளவு விட்டமின் மற்றும் மினரல்ஸ் சத்துக்களும் உள்ளதால், இது ரத்த அழுத்தத்தை சமன் செய்கிறது.

கொய்யா

கொய்யா பழத்தை மதிய உணவிற்கும் 30 நிமிடத்திற்கு முன் சாப்பிட வேண்டும். ஏனெனில் இது குறைவான ரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.

தயிர்

தயிரில் பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் ஆகியவை உள்ளது. இது ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. ஆனால் குறைந்த ரத்த அழுத்த பிரச்சனை வரும் போது மட்டும் சாப்பிடாமல், தொடர்ந்து தயிரை உணவில் சேர்த்து வரலாம்.

தக்காளி

நம் அன்றாட உணவில் தக்காளி முக்கிய இடம் வகிக்கிறது. இது சருமத்திற்கும் உடல் நலனுக்கும் ஏராளமான நன்மைகளை கொடுக்கிறது. தக்காளியில் இருக்கும் லைகோபென் என்ற சத்து குறைந்த ரத்த அழுத்தத்தில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

கேரட்

கேரட்டில் பொட்டாசியம் மற்றும் ஆன்ட்டி-ஆக்ஸிடண்டுகள் நிறைந்துள்ளது. இது குறைவான ரத்த அழுத்தத்தில் இருந்து நம்மை பாதுகாப்பதுடன், உணவை விரைவாக செரிக்க வைக்கவும் உதவுகிறது.

தர்பூசணி

தர்பூசணி பழத்தில் L-citrulline உள்ளது, இது ரத்த நாளங்களை சீராக இயங்க வைக்க உதவுகிறது. அதனால் தினமும் காலையில் வெறும் வயிற்றில் தர்பூசணிப்பழம் சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை பெறலாம்.

பீட்ரூட்

பீட்ரூட்டில் இரும்புச்சத்து, ஃபோலேட், விட்டமின் போன்றவை உள்ளது. இவைகள் ரத்த அணுக்களின் உற்பத்தியை சீராக்கி, ரத்த சோகை பிரச்சனை வராமல் தடுக்கிறது. எனவே இந்த பீட்ரூட் ஜூஸை அடிக்கடி குடித்து வருவது மிகவும் நல்லது,

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்