உடலை ஃபிட்டாக வைக்கும் உணவு கலவைகள்: இந்த 2 பொருட்களை சேர்த்து சாப்பிடுங்கள்

Report Print Printha in உணவு
349Shares
349Shares
ibctamil.com

உணவு வகைகள் நம் உடல் எடையை அதிகரிக்கவும், குறைக்கவும் உதவுகிறது. அந்த வகையில் உடலை எப்போதும் கட்டுக்கோப்புடன் பிட்டாக வைத்துக் கொள்ள உதவும் சில உணவுக் கலவைகள் இதோ,

முட்டை மற்றும் மாம்பழம்

காலை உணவாக ஒரு முட்டை ஆம்லெட் மற்றும் சில மாம்பழ துண்டுகளை சாப்பிட்டால் நம் சருமம் திடமாக இருக்கும். ஏனெனில் இந்த உணவுக் கலவையில் அமினோ அமிலம் மற்றும் விட்டமின் C ஆகியவை நிறைந்துள்ளது.

குடைமிளகாய் மற்றும் கருப்பு பீன்ஸ்

கருப்பு பீன்ஸ் மற்றும் குடை மிளகாயை ஒன்றாக சேர்த்து பலவிதமாக சமைத்து சாப்பிட்டு வந்தால் நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, எவ்வித நோய் தாக்குதலும் வராது.

ஆலிவ் ஆயில் மற்றும் தக்காளி

தக்காளியில் 4 முக்கிய கரோடினாய்டுகள் மற்றும் 3 முக்கிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அடங்கியுள்ளது. இது புற்றுநோய் மற்றும் இதய நோய்களை எதிர்த்து போராடும். இத்தகைய தக்காளியுடன் வெர்ஜின் ஆலிவ் ஆயிலை கலக்கும் போது, நம் உடலுக்கு ஆரோக்கியமான மோனோ சேச்சுரேட்டட் கொழுப்புகள் கிடைக்கும்.

ப்ராக்கோலி மற்றும் தக்காளி

ஒன்றரை கப் ப்ராக்கோலியை இரண்டரை கப் தக்காளியுடன் கலந்து, பீட்சா அல்லது நூடுல்ஸ் உடன் சேர்த்து சாப்பிடலாம். அதனால் நம் உடலில் புற்றுநோய் எதிர்ப்பு குணங்கள் அதிகமாகி, புற்றுநோய் வராமல் தடுக்கும்.

ஓட்ஸ் மற்றும் ஸ்ட்ராபெர்ரி

1/2 கப் நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி துண்டுகளை ஓட்ஸ் கஞ்சியுடன் சேர்த்து காலையில் சாப்பிட்டு வந்தால் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பினால் ஏற்படும் தீமைகளை கட்டுப்படுத்தி, நெஞ்சு வலி மற்றும் ரத்த உறைக் கட்டிகள் உருவாகாமல் தடுக்கும்.

க்ரீன் டீ மற்றும் எலுமிச்சை

க்ரீன் டீ-யுடன் ஒரு முழு எலுமிச்சை ஜூஸை பிழிந்து குடித்து வந்தால், இதயத்தின் ஆரோக்கியம் மேம்பட்டு, இதயம் தொடர்பான நோய்கள் வருவது தடுக்கப்படும்.

லவங்கப்பட்டை மற்றும் முழு தானியம்

முழு தானிய ரொட்டியுடன் ட்ரான்ஸ் கொழுப்பு இல்லாத செயற்கை வெண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் லவங்கப்பட்டை தூள் தூவி சாப்பிட்டு வந்தால், உடலின் ஆற்றல் அதிகரித்து, உடல் எடை வேகமாக குறையும்.

பூண்டு மற்றும் வெங்காயம்

பூண்டு மற்றும் வெங்காயம் ஆகிய இரண்டு பொருட்களிலும் சாஸ் அல்லது சூப் செய்து குடித்து வரலாம். ஏனெனில் அதில் பல ஆர்கனோ சல்பர் சேர்க்கைகள் மற்றும் ஆரோக்கியமான இதயத்தை உருவாக்கும் ரசாயனங்களும் அடங்கியுள்ளது.

எனவே இந்த கலவை ரத்த உறைகட்டிகள் ஏற்படாமல் தடுத்து, நம் உடலில் உள்ள நச்சுகளை நீக்குகிறது.

க்ரீன் டீ மற்றும் கருப்பு மிளகு

1 கப் க்ரீன் டீயில் சிறிதளவு கருப்பு மிளகு தூவி குடித்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், பசியை அடங்கச் செய்து, இடுப்பை சுற்றி இருக்கும் கொழுப்பை குறைக்க உதவுகிறது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்