கடுமையான மூட்டு வலியா? இந்த உணவுகளை கண்டிப்பாக சாப்பிடாதிங்க!

Report Print Arbin Arbin in உணவு
677Shares
677Shares
ibctamil.com

மூட்டு இணைப்புகளில் உள்ள அழற்சி மற்றும் வீக்க நிலை தான் ஆர்த்ரிடிஸ். தற்போது நிறைய பேர் மூட்டு பிரச்சனைகளால் அதிகம் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

ஆர்த்ரிடிஸ் தீவிர நிலையில் இருந்தால், பற்களைத் துலக்குவது, குளிப்பது, தூங்குவது போன்ற செயல்கள் கூட சவாலானதாக இருக்கும்.

ஆர்த்ரிடிஸ் பிரச்சனை இருப்பவர்கள், தாங்கள் உண்ணும் உணவுகளில் அதிக கவனத்தை செலுத்துவதன் மூலம் நிலைமை மோசமாவதைத் தடுக்கலாம்.

கத்திரிக்காய், தக்காளி, குடைமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் போன்றவை மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருட்கள். ஆனால் ஆர்த்ரிடிஸ் பிரச்சனை உள்ளவர்கள், இவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால், நிலைமை மேலும் மோசமாகும்.

வாரத்திற்கு 1-2 முறை இறைச்சியை சாப்பிடுவதால், உடலுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துக்களான புரோட்டீன்கள் மற்றும் இரும்புச்சத்து கிடைக்கும்.

ஆனால் அளவுக்கு அதிகமாக சாப்பிடாதீர்கள். ஏனெனில் இறைச்சிகளில் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் அதிகளவில் நிறைந்துள்ளது.

ஆர்த்ரிடிஸ் பிரச்சனை இருந்தால், எண்ணெயில் பொரித்த அல்லது வறுத்த உணவுகளை கட்டாயம் தவிர்த்தாக வேண்டும். முக்கியமாக வெஜிடேபிள் ஆயிலில் பொரிக்கும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

கெமிக்கல் பயன்படுத்தப்பட்டு பதப்படுத்தப்படும் உணவுகளை உட்கொண்டால், அவை உடலினுள் உள்ள அழற்சியைத் தூண்டிவிட்டு, உங்கள் ஆர்த்ரிடிஸ் பிரச்சனையை தீவிரமாக்கும்.

பால் பொருட்கள் உடலுக்கு புரோட்டீன் சத்துக்களை வழங்கினாலும், இந்த வகை புரோட்டீன்கள் ஆர்த்ரிடிஸ் பிரச்சனை உள்ளவர்களது நிலைமையை மோசமாக்கும்

வேண்டுமானால் பால் பொருட்களுக்கு பதிலாக பீன்ஸ், நட்ஸ் அல்லது டோஃபு போன்றவற்றை சாப்பிடலாம்.

உங்களுக்கு ஆர்த்ரிடிஸ் இருந்தால், காபி பக்கமே செல்லக்கூடாது. காபி உடலில் அமில அளவை அதிகரித்து, மூட்டுக்களில் உள்ள அழற்சியை மோசமாக்கும். வேண்டுமானால் க்ரீன் டீ குடிக்கலாம். இதனால் எவ்வித பக்கவிளைவும் ஏற்படாது.

எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான ஆர்த்ரிடிஸ், ஆஸ்டியோபோரோசிஸ் கொண்டவர்கள், வலி தீவிரமாகாமல் இருக்க வேண்டுமானால் ஆல்கஹாலை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

ஆர்த்ரிடிஸ் இருந்தால், கோதுமை மற்றும் க்ளுட்டன் உணவுப் பொருட்களை அறவே தவிர்க்க வேண்டும். இல்லையெனில் மோசமான விளைவை சந்திக்க வேண்டியிருக்கும்.

உப்பு அதிகம் நிறைந்த ஊறுகாய், கருவாடு போன்றவற்றை மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைக் கொண்டவர்கள் சாப்பிடக்கூடாது. இவை மூட்டு இணைப்புக்களில் உள்ள அழற்சி அல்லது வீக்கத்தை தீவிரப்படுத்தும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்