எடையை குறைக்க டயட்டா? இந்த அறிகுறிகள் இருந்தால் கவனம் பாஸ்

Report Print Thuyavan in உணவு
421Shares
421Shares
ibctamil.com

நமது இயல்பு வாழ்வில் டயட் இருத்தல், உடற்பயிற்சி செய்தல் போன்ற பல்வேறு வழிகளில் உடல் எடையை குறைக்க முயற்சி செய்வது வழக்கமான ஒன்றே.

பொதுவாக நம் டயட்டில் ஊட்டச்சத்துக்கள், புரதங்கள், நார்ச்சத்து மற்றும் இதர அதிமுக்கிய பொருட்கள் நிறைந்திருக்க வேண்டும்.

அப்போது தான் உடலின் தசைகள் வளர்ச்சி அடைந்து கொழுப்பும் வேகமாக குறையும்.

அப்படி நாம் பின்பற்றும் போது சில டயட்கள் நமக்கு ஆரோக்கியமாக அமையவில்லை என்பதை சில அறிகுறிகள் காட்டிக் கொடுத்து விடும். அப்படிப்பட்ட அறிகுறிகளை தான் இப்பதிவில் காணப்போகிறோம்.

 • மன அழுத்தம் இது தான் முதல் அறிகுறியாகும், உடலளவிலும் சரி, மனதளவிலும் சரி சோர்வு ஏற்பட்டால் நமது உணவு பழங்கங்கள் மாறக்கூடும்.
 • உடலில் அலர்ஜிகள் உண்டாக துவங்கும்.
 • அதிகமாக பசி எடுக்கும், அடிக்கடி ஏதாவது உண்ண உணவு எடுத்துகொள்ள தோன்றும்.
 • உடல் வலி ஏற்படக்கூடும், டயட்டில் இருப்பவர்களுக்கு பெரும் பிரச்சனையே இந்த உடல் வலி தான்.
 • வேறு உணவு முறை முயற்சிக்களாமா என்ற மனஅழுத்தம் அதிகரிக்கும்.
 • எடையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருப்பதும் முக்கிய அறிகுறி தான்.
 • இயல்பற்ற முறையில் பிறருடன் சேர்ந்து உணவு மேற்கொண்டால், எடை குறைய வாய்ப்பில்லாமல் போய்விடும்.
 • பட்டினி இருந்தால் பலன் காண இயலாது. இதனால் உடல் ஆரோக்கியம் குறைய தான் செய்யும். ஆகையால் சிறந்த கனிகள், காய்கறிகள் மூலம் பயன் காணலாம்.
 • மனநிலை ஏற்ற இறக்கத்திற்கு உங்கள் டயட் முக்கிய பங்களிக்கும்.
 • உடல் சுகவீனங்களை ஏற்படுத்தும் உணவுகளை நீங்கள் உட்கொண்டால், அதனை உடனே நிறுத்த வேண்டும்.
 • சருமத்தில் சுருக்கங்கள் ஏற்பட்டு, பருக்கள் அதிகரித்து காணப்பட்டால், கண்டிப்பாக உங்கள் உணவில் ஏதாவது பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம். இதனால் சரும பொலிவை இழக்க நேரிடும்.
 • உடல் வலி மோசமடைந்து, மூட்டுக்களில் வலியெடுக்க ஆரம்பிக்கும்.
 • நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து மெட்டாபாலிச அளவுகள் குறையத் தொடங்கினால், டயட்டை மாற்ற வேண்டிய நேரமிது.
 • செரிமான தொந்தரவுகள் ஏற்படும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்