இனிமேல் உணவு உண்ணும் போது இதை கடைபிடியுங்கள்

Report Print Thuyavan in உணவு
735Shares
735Shares
ibctamil.com

எந்த ஒரு காரணமும் இல்லாமல் நம் முன்னோர்கள் சாப்பிடுவதற்கு என்று விதிமுறைகளை விதித்திருக்கமாட்டார்கள்.

நம் அன்றாட வாழ்வில் உண்ணும் உணவுகள் மட்டுமின்றி, உண்ணும் போது மேற்கொள்ளும் சில பழக்கவழக்கங்களும் முக்கிய பங்கை வகிக்கிறது.

சாப்பிடும் போது மேற்கொள்ளக்கூடாத சில பழக்கங்களுக்கான காரணங்களை பற்றி தான் அறிந்து கொள்ள போகிறோம்.

சாப்பிடுவதற்கு முன் தண்ணீரை அதிகம் குடிக்கக்கூடாது ஏனென்றால், உணவை செரிக்க உதவும் அமிலத்தின் திறனை குறைந்து, உணவுகள் சரியாக செரிமானமாகாமல் போகும்.

உண்ணும் உணவில் கவனம் தேவையென்பதால் உணவு உட்கொள்ளும் போது தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டோ, மொபைல் போன் அல்லது டிவி ரிமோட்டைப் பயன்படுத்திக் கொண்டோ சாப்பிடக்கூடாது.

மேலும் புத்தகங்களைப் படித்துக் கொண்டோ, பேசிக் கொண்டோ, எழுதிக் கொண்டோ உணவு உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இதனால் எவ்வளவு என்று தெரியாமல் போவதோடு, அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடக்கூடும்.

நின்று கொண்டோ அல்லது நடந்து கொண்டோ சாப்பிடும் பழக்கத்தைத் தவிர்ப்பது நன்மை. அதேப் போல் தவறான நிலையில் அமர்ந்து உட்கொள்வதையும் தவிர்க்க வேண்டும். இதனால் உண்ணும் உணவுகள் வேகமாக செரிமானமாகிவிடும்.

சாப்பிடும் போது கைகளை தரையில் ஊன்றி சாப்பிடக்கூடாது, அப்படி சாப்பிட்டால் உண்ணும் உணவு உடலில் ஒட்டாது என்று கூறுவார்கள்.

இதற்கு காரணம் சாப்பிடும் போது கைகளை ஊன்றி சாப்பிடும் போது, வயிறு சுருங்கி விரைவில் வயிறு நிரம்பியது போன்று இருக்கும், விளைவாக உடல் பருமன் அதிகரிக்கும்.

கால்களை மடக்கி, தரையில் அமர்ந்து உட்கொள்வதால், உணவுகள் முறையாக இரைப்பையை அடைந்து சரியாக செரிமானமாகும்.

அவசர அவசரமாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக காலை உணவை எழுந்த ஒரு மணிநேரத்திற்குள்ளேயே சாப்பிடுவதும், இரவு நேரத்தில் தூங்குவதற்கு 2 மணிநேரத்திற்கு முன்பே சாப்பிடுவது நண்மை.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்